திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா | ஜெயந்தியிடம் நலம் விசாரித்தார் கர்நாடக முதல்வர் | மகளுடன் கமல் உற்சாக உடற்பயிற்சி | மீண்டும் நடிக்க வருகிறார் சரிதா | கேரளாவில் காலா டிக்கெட் விற்பனை: ரஜினி ரசிகர்கள் மும்முரம் | காவிரி பிரச்சினையில் ரஜினி கருத்து: கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு | பச்சோந்திகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் -கஸ்தூரி | டோலிவுட்டில் பிசியாகும் மேகா ஆகாஷ் | ஹீரோவை தனது மடியில் உட்கார வைத்த ஜான்வி கபூர் | ராம்கோபால்வர்மாவை இம்ப்ரஸ் செய்த டில்லி பெண் |
நடிகை மேகா ஆகாஷ் அறிமுகமான முதல் படம் ஒரு பக்க கதை. இந்த படத்தில் ஜெயராமின் மகன் காளிதாசுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படம் சில வருடங்களாகவே கிடப்பில் கிடக்கிறது. அதன்பிறகு கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.
முதல் படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், இரண்டாவது தனுஷ் படம் என்பதால் இந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்தார் மேகா ஆகாஷ். ஆனால் இந்த படமும் இழுத்தடித்துக்கொண்டே கிடக்கிறது.
இந்த நிலையில், தமிழில் தற்போது அதர்வாவுடன் பூமராங் படத்தில் நடிக்கிறார். என்றாலும், தமிழ் சினிமா தொடர்ந்து தன்னை ஏமாற்றி வருவதால், தெலுங்கில் அதிகப்படியான கவனம் செலுத்துகிறார் மேகா ஆகாஷ். ஏற்கனவே அவர் நடித்த லைய் என்ற படம் வெளியான நிலையில், தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், முன்வரிசை நடிகர்களின் படங்களை கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.