பெங்களூரு, கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷாவின் பேச்சை மொழிபெயர்த்தவர், 'ஏழைகளுக்கு மோடி உதவ மாட்டார்' என, கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், காங்., கைச் சேர்ந்த சித்த ராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தில், மே, 12ல் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, 'எடியூரப்பாவின் ஆட்சி தான், ஊழலில்
முதலிடத்தில் உள்ளது' என்றார். பா.ஜ., முதல்வர் வேட்பாளராக கருதப்படும் அவரை, வாய் தவறி, ஊழல்வாதியாக, அமித் ஷா கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாட காவில்நடந்த பொதுக் கூட்டத்தில், அமித் ஷா ஹிந்தியில் பேசினார். அவர் பேச்சை, பா.ஜ., - எம்.பி., பிரகலாத் ஜோஷி, கன்ன டத்தில் மொழி பெயர்த்தார்.அப்போது, ''கர்நாடகா வை வளர்ச்சியடைய செய்ய, சித்தராமையா அரசால் முடியாது.
பிரதமர், நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளியுங்கள். ''கர்நாடகாவை, முதல் மாநிலமாக நாங்கள் மாற்றிக் காட்டுவோம்,'' என, அமித் ஷா கூறினார். இதை கன்னடத்தில் மொழி பெயர்த்த, பிரகலாத் ஜோஷி, ''ஏழைகளுக்காகவும், நலிவடைந் தோருக்காகவும், பிரதமர், மோடி எதுவும் செய்ய மாட்டார்.
''மத்தியில், மோடி ஆட்சி உள்ளது. எடியூரப்பாவின்
வெற்றியை உறுதி செய்யுங்கள். கர்நாடகா, முதல் மாநிலமாக வளர்ச்சி அடையும், என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மைசூரில் நேற்று பேசிய, அமித் ஷா, ஊழலில் முதலிடத்தில் இருப்பது, சித்த ராமையா ஆட்சி தான் என்பதற்கு பதிலாக, எடியூரப்பா ஆட்சி என, வாய்தவறி பேசியதாக ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, ''பா.ஜ., தலைவர்கள் தற்போது தான், உண்மை பேசுகின்றனர்,'' என, சித்தராமையா கிண்டல் அடித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து