மீண்டும் பேய்ப்படத்தில் நடிக்கும் நயன்தாரா | பணத்தை திருப்பித்தர கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர்கள் புகார் | யுவன்சங்கர்ராஜா - சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைக்கும் படம் | திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா | ஜெயந்தியிடம் நலம் விசாரித்தார் கர்நாடக முதல்வர் | மகளுடன் கமல் உற்சாக உடற்பயிற்சி | மீண்டும் நடிக்க வருகிறார் சரிதா | கேரளாவில் காலா டிக்கெட் விற்பனை: ரஜினி ரசிகர்கள் மும்முரம் | காவிரி பிரச்சினையில் ரஜினி கருத்து: கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு | பச்சோந்திகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் -கஸ்தூரி |
கடந்த வருடம் டோரா என்ற பேய்ப்படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் நயன்தாராவுக்கு பேய்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.
விராட்கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் பாரி என்ற ஹிந்தி படம் வெளியானது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் வகைப்படமான 'பாரி' படம் ஹிந்திப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீ-மேக் செய்ய விரும்பி ரைட்ஸை வாங்க போட்டிப் போட்டுள்ளனர்.
இந்தப்போட்டியில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் பாரியின் ரீமேக் ரைட்ஸை வாங்கி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படத்தில் அனுஷ்கா சர்மா நடித்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்தார் நயன்தாரா. அந்த அடிப்படையிலேயே இந்தப்படத்தில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.