அமிதாப் முன்னிலையில் சிரஞ்சீவி-நயன்தாரா திருமணம் | ஸ்டிரைக் தொடரும், அரசிடம் முறையிட பேரணி: விஷால் | மீண்டும் பேய்ப்படத்தில் நடிக்கும் நயன்தாரா | பணத்தை திருப்பித்தர கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர்கள் புகார் | யுவன்சங்கர்ராஜா - சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைக்கும் படம் | திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா | ஜெயந்தியிடம் நலம் விசாரித்தார் கர்நாடக முதல்வர் | மகளுடன் கமல் உற்சாக உடற்பயிற்சி | மீண்டும் நடிக்க வருகிறார் சரிதா | கேரளாவில் காலா டிக்கெட் விற்பனை: ரஜினி ரசிகர்கள் மும்முரம் |
யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பதோடு வேறுவேலைகளையும் செய்து வருகிறார். 'யு1 ரெக்கார்ட்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்கிறார் யுவன் சங்கர்.
பியார் பிரேமா காதல் என்ற படத்தை அடுத்து யுவன்சங்கர்ராஜா வின் தயாரிப்பில் ஒருவாகும் படம் 'பேய்ப்பசி'.
யுவனின் உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அவருடன் இணைந்து சந்தோஷ் நாராயணனும் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால், இந்தப் படத்தின் இசைக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடுகிறார் என்பது உப தகவல்..