புதுடில்லி, :மத்திய அமைச்சர்கள் அனைவரும், தங்களின் இரு சாதனைகள் பற்றிய தகவல் களை அளிக்கும்படி, பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. இவற்றை வைத்து, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை பட்டியலை தயாரிக்க, திட்டமிடப் பட்டுள்ளது. இதனடிப்படையில், 2019 லோக்சபா தேர்தலுக்கான பிரசாரஉத்திகளை வகுக்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, பெரும் பான்மை இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
உத்தரவு
மத்திய அமைச்சர்கள் அனைவரும், கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த, தங்களின் இரு சாதனைகள் பற்றிய தகவல்களை அளிக்கும் படி, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது; இவற்றை வைத்து, பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை பட்டியலை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அடுத்த லோக்சபா தேர்தலின்போது, மக்களை அணுகவும், பிரசார உத்திகளை வகுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை குறித்த விபரங்களை அளிக்கும்படி,
அனைத்து அமைச்சகங் களையும், பிரதமர், மோடி கேட்டுக்
கொண்டார். நிறைவேற்றப் படாத வாக்குறுதிகள் குறித்தும், அதற்கான காரணங்கள்
குறித்தும், அவர் கேட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டப்படி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிறப்பான சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 2014ல், இந்தியாவில், இரண்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை, 120 ஆக அதிகரித்துள்ளது.
ரூ.1.20 லட்சம் கோடி
இந்த துறையின் விற்றுமுதல், 2014ல், 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது; இந்தாண்டு மார்ச் முடி வில், இது, 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்ச்சி கரமான வரி விதிப்பு முறையால், இந்தியாவில், பொருட் களை தயாரிப்பதுமலிவாக உள்ளது.
எனவே, மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கு பதில், தயாரிப்பதில், பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில், மொபைல் போன் துறையில், உள்நாட்டு தேவையில், 96 சதவீதம், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.
சாலை அமைப்பு தீவிரம்!
மத்திய அமைச்சகங்களில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை, கடந்த சில
ஆண்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறது. இத்துறையில், 2014ம் ஆண்டில், 4,000 கி.மீ., துார சாலைகள் நிர் மானிக்கப்பட்டன. 2018, பிப்ரவரி வரையிலான ஒரு ஆண்டில், 9,000 கி.மீ., துார சாலை நிர்மாணிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
டில்லியை சுற்றி, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. டில்லி - மீரட் இடையே, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு சாலைகளும், ஏப்ரலில், பிரதமர்,நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப் பட உள்ளன.
தொலை தொடர்பில் அசுர வளர்ச்சி
மத்திய தொலைதொடர்பு துறை இணை அமைச்சர், மனோஜ் சின்ஹா தலைமையில், பாரத் நெட் என்ற பெயரில், கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின் றன. கடந்த, 2014, ஜூனில், இணையதள பயன்பாட்டு அடர்த்தி, 75 சதவீதமாக இருந்தது. இது, 2017, செப்டம்பரில், 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொலைதொடர்பு துறையில், 2015ம் ஆண்டில், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் இருந்தன; இது, 2017ம் ஆண்டில், 40 லட்சமாக அதிகரித்து உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (13)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply