கேரளாவில் காலா டிக்கெட் விற்பனை: ரஜினி ரசிகர்கள் மும்முரம் | காவிரி பிரச்சினையில் ரஜினி கருத்து: கர்நாடக ரசிகர்கள் எதிர்ப்பு | பச்சோந்திகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் -கஸ்தூரி | டோலிவுட்டில் பிசியாகும் மேகா ஆகாஷ் | ஹீரோவை தனது மடியில் உட்கார வைத்த ஜான்வி கபூர் | ராம்கோபால்வர்மாவை இம்ப்ரஸ் செய்த டில்லி பெண் | மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா? | மெர்சல் படத்திற்கு பிரிட்டன் விருது | எனக்கு எல்லா வித்தையும் தெரியும்! : ப்ரியா வாரியர் | டிசைன் டிசைனாக கலக்கும் சமந்தா! |
காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம்தான் இந்த பிரச்சினைக்கு உகந்த தீர்வு என்று சுறியிருந்தார். இதற்கு கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் முருகன் கூறியிருப்பதாவது:
காவிரி நதி நீர் பிரச்சினையில் உணர்ச்சிவசப்பட்டு எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருப்பதுதான் ரஜினிக்கு நல்லது. கர்நாடகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினி கூறுவதால் இங்குள்ள தமிழர்கள், ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இரு அரசும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தில் அவர் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. நாங்கள் எப்போதும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருப்போம். என்கிறார் முருகன்.
"கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்த ரஜினி கர்நாடக விவசாயிகளுக்கு எதிராக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.