ரஜினிக்கும், கமலுக்கும் கடும் போட்டி | அமெரிக்க படவிழாவில் மெர்குரி | டுவிட்டரில் முதலிடத்தில் மோகன்லால்..! | காலா டீசரில் தோனி அசத்தல் | அமிதாப் முன்னிலையில் சிரஞ்சீவி-நயன்தாரா திருமணம் | ஸ்டிரைக் தொடரும், அரசிடம் முறையிட பேரணி: விஷால் | மீண்டும் பேய்ப்படத்தில் நடிக்கும் நயன்தாரா | பணத்தை திருப்பித்தர கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர்கள் புகார் | யுவன்சங்கர்ராஜா - சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைக்கும் படம் | திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா |
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு சினிமா நட்சத்திரங்களின் கைக்குள் வந்தது சமீப காலங்களில் தான். ஆனால் இளம் நடிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் தங்கள் கணக்கை ஆரம்ப காலத்திலேயே துவங்கினாலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் டுவிட்டருக்குள் நுழைந்தது என்னவோ சற்று தாமதமாகத்தான்.
அந்தவகையில் தற்போது 5.02 மில்லியன் பேர் தன்னை டுவிட்டரில் பின்தொடர தென்னிந்திய மூத்த ஸ்டார் நடிகர்களிலேயே முதல் இடத்தில் இருக்கிறார் மோகன்லால். இவருக்கு அடுத்தததாக ரஜினி 4.61 மில்லியன் மற்றும் அவருக்கு மிக நெருக்கத்தில் கமல் 4.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்கள். மம்முட்டி இப்போதுதான் 1 மில்லியன் என்கிற எண்ணிக்கையை நெருங்கியுள்ளார்.