ரஜினிக்கும், கமலுக்கும் கடும் போட்டி | அமெரிக்க படவிழாவில் மெர்குரி | டுவிட்டரில் முதலிடத்தில் மோகன்லால்..! | காலா டீசரில் தோனி அசத்தல் | அமிதாப் முன்னிலையில் சிரஞ்சீவி-நயன்தாரா திருமணம் | ஸ்டிரைக் தொடரும், அரசிடம் முறையிட பேரணி: விஷால் | மீண்டும் பேய்ப்படத்தில் நடிக்கும் நயன்தாரா | பணத்தை திருப்பித்தர கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர்கள் புகார் | யுவன்சங்கர்ராஜா - சந்தோஷ் நாராயணன் இணைந்து இசையமைக்கும் படம் | திருமணம் செய்து கொண்டார் ஜோடி பிரியா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம்'மெர்குரி'. வசனமே இல்லாமல் சைலண்ட் மூவியாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரெடியாகி சில மாதங்களாகின்றன.
ரிலீசுக்கு தயாரானநிலையில் உள்ள 'மெர்குரி' திரைப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ்த்திரைப்படத்துறையில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்தவிழாவில் 'மெர்குரி' திரைப்படம் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்படுகிறது.
ஸ்டிரைக் ஒருவேளை நீடித்து, ஏப்ரல் 13 அன்று மெர்குரி படத்தை இங்கே ரிலீஸ் செய்ய முடியாமல் போனாலும் திட்டமிட்டபடி லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய சர்வதேசத் திரைப்பட விழா bமர்குரி படத்தை திரையிடுவதில் எந்த மாற்றமும் இல்லையாம்.