சென்னை: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகத்தில், யார் பெயரில் ஆட்சி நடத்துகின்றனரோ, அவருக்கு களங்கம் ஏற்படும்,'' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல் கூறினார்.
சென்னையில் நேற்று, கமல் அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடினமான காரியம் அல்ல. மத்திய அரசு நினைத்தால், வலுவான எண்ணம் இருந்தால்,உடனே செய்யலாம்.
உச்ச நீதிமன்றம், தன் தீர்ப்பில் தெளிவாக கூறி விட்டது. இப்போது போய், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்பது, தாமதப்படுத்தும் செயல்.
வாரியம் அமைக்காவிட்டால், தமிழகத்தில் யார் பெயரில் ஆட்சி நடத்துகின்றனரோ, அவருக்கே களங்கமாக அமையும்.வாரியம் அமைக்காமல், காலம் தாழ்த்துவது, ஓட்டுக்கான அரசியல். இது குறித்து, முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். இவ்விஷயத்தில், 'தற்கொலை செய்து கொள்வோம்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூறுவது, அரசியல் பித்தலாட்டம். வாரியத்திற்காக, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால் வரவேற்பேன்.
தேவைப்பட்டால், டில்லிக்கு சென்றும் போராடு வேன். படிப்படியாய் இறங்கி வந்து,
நீரின் அளவை குறைத்த பிறகும், வாரியம் அமைக்க கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
காவிரி மேலாண்மை
வாரியம் குறித்த, ரஜினியின் கருத்தை
வரவேற்கிறேன்.
துாத்துக்குடி மக்கள் நடத்தி வரும் போராட்ட களத்தில், நானும் பங்கேற்கி றேன். இதற்காக, ஏப்., 1ல், துாத்துக்குடி செல்கிறேன். 'ஸ்டெர்லைட்' ஆலையால், போபால் போன்ற பேரழிவு, துாத்துக்குடியில் ஏற்படும். 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வேண்டும்; இல்லையென்றால், விரிவாக்கப் பணிகள் நடத்தக் கூடாது, என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3+ 46)
Reply
Reply
Reply