சென்னை,''காவிரி பிரச்னையில், தமிழக அரசு நாடகம் நடத்தி உள்ளது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று அவர் கூறியதாவது:உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்கு, கடைசி நிமிடம் வரை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், 'இன்னும் ஒரு வாரம் உள்ளது; இன்னும், மூன்று நாட்கள் உள்ளது; இன்னும் ஒரு நாள் உள்ளது' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். தற்போது, 'கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல, ஒரு நாடகத்தை நடத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம்,அமைச்சரவையை கூட்டியுள்ளனர். கூட்டத்தில், என்ன பேசினர் என, எந்த செய்தியும் வரவில்லை. மத்திய அரசை கண்டித்து, தீர்மானம் போடும் தெம்பு, திராணி இல்லை. ஏனெனில், ஊழல் செய்து கொள்ளை அடித்து வரும், இந்த ஆட்சி பறிபோய் விடக்கூடாது என்ற அச்சம். சட்ட சபையில், சிறப்பு தீர்மானம்
நிறைவேற்றிய
போது, 'உடனடியாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என, தெரிவித்தேன்; அதற்கான முயற்சியில், அரசு
ஈடுபடவில்லை.
இப்பிரச்னையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
ராஜினாமா செய்தால், எங்களுடைய, நான்கு ராஜ்ய சபா எம்.பி.,க்கள், ராஜினாமா
செய்யத் தயார். அதேபோல்,அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய முன்வந்தால், அடுத்த நிமிடம், நாங்களும் ராஜினாமா செய்ய தயார். அந்த துணிச்சல், ஆளும் கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
நடக்குமா இது?
காவிரி பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகள், முரண்பட்டு நிற்பது, தொடர் கதையாக உள்ளது. காவிரி நீரை பங்கீடுவதில், கர்நாடகத்திற் கும், தமிழகத்திற்கும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரச்னை இருந்து வருகிறது. காவிரி நீரில், தமிழகத் திற்கு உரிய பங்கை தர மாட்டோம் என்பதில், கர்நாடகா கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. ஆனால், தமிழகத்தின் உரிமையை பெறுவதில், தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை உணர்வு இல்லை.ஆளும்கட்சிக்கு எதிராகவே, எதிர்க்கட்சி கள் நிற்கின்றன.
காங்கிரஸ்,
ஆளும் கட்சியாக இருந்தபோதும், தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தபோதும்,
எதிர்க் கட்சிகள், எதிர் கருத்துக்களையே தெரிவித்தன.
இதையடுத்து,
அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகள் தொடர்ந்தபோதும்,ஒற்றுமையாக குரல் எழுப்பவில்லை.இச்சூழலில், 'காவிரி நதி நீர் பங்கீடுதொடர்பாக, 1924ல், போடப்பட்ட ஒப்பந்தத்தை, 1974ல், புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, அதை செய்யவில்லை' என, காங்கிரசை சேர்ந்த, மறைந்த முன்னாள் முதல்வர், பக்தவத்சலம், எப்போதோ பேசியது, இரு தினங்களாக, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதேபோல், தற்போதும் ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.,வும், இப்பிரச்னையில், பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகின்றன.ஒரே பிரச்னைக்கு, தனித்தனியேபோராட்டம் நடத்துகின்றனர். அனைத்து கட்சிகளும், இணைந்து போராடினால், தமிழகத்தின் ஒற்றுமை வெளிப்படும்; மத்திய அரசும் யோசிக்கும். இது நடக்குமாஎன்பதே, பொது மக்கள் எதிர்பார்ப்பு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து