சென்னை:தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யசாகர் ராவ் எழுதிய புத்தகம், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது.இதுவரை, டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த, சசிகலாவின் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யாசாகர் ராவ், 'தோஸ் ஈவன்ட்புல் டேஸ்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில், சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், ஜெ., இருந்தபோது நடந்த
சம்பவங் கள் பற்றியும் எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அந்த புத்தகத்தை கேட்டு, கவர்னர் அலுவலகத்திற்கு, விசாரணை 'கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதற்கு பதில் வராததால், 'புத்தகத்துடன் அதிகாரி ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும்' என, 'சம்மன் அனுப்பப் பட்டது.
அதன்படி, கவர்னர் அலுவலக பிரிவு உதவியாளர், ஸ்ரீனிவாசன், நேற்று ஆணையத்தில் ஆஜராகி, புத்தகத்தை, நீதிபதி ஆறுமுகசாமியிடம் சமர்ப்பித் தார். புத்தகத்தை, நீதிபதி ஆறுமுகசாமி படித்தார்; பின், ஸ்ரீனிவாசனிடம் ஒப்படைத்தார். 'மீண்டும் கேட்கும்போது, புத்தகத்தை எடுத்து வர வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
சசி தரப்பில் குறுக்கு விசாரணை!
விசாரணை கமிஷனில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களிடம், நேற்று குறுக்கு விசாரணை துவங்கியது. நேற்றைய விசாரணை யில், முன்னாள் மருத்துவ கல்விஇயக்குனர், விமலா மற்றும் சென்னை, ஓமாந்துாரார் மருத்துவ கல்லுாரி டீன்,
நாராயண பாபு ஆகிய இருவரிடமும், தனித்தனியாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள்,
அரவிந்தன், சுப்ரமணியன் ஆகியோர், குறுக்கு விசாரணை நடத்தினர்.பின்,
வழக்கறிஞர் அரவிந்தன் கூறியதாவது:டாக்டர்களிடம் குறுக்கு
விசாரணை செய்தோம். சில கேள்விகளுக்கு மட்டும், 'தெரியும்' என்றனர்.
அதேபோல், 'சுகாதாரத் துறை செயலர், ராதா கிருஷ்ணனுக்கு தான் அனைத்தும் தெரியும்' எனக் கூறினர்.ஜெயலலிதா சிகிச்சை குறித்து, மேற்பார்வையிட அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவை, டாக்டர் நாராயணபாபு, மருத்துவ மனையில் ஒருமுறை சந்தித்தாக கூறி
உள்ளார்.
அதேபோல், கவர்னர் அலுவலக பிரிவு உதவி யாளர், ஸ்ரீனிவாசன் ஆஜராகி, வித்யாசாகர் எழுதிய புத்தகத்தை அளித்தார். அதில், ஜெ., குறித்து இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகம் விற்பனைக்கு இல்லை என்பதால், நாங்கள் படிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply