கமல்ஹாசனின் முடிவுக்கு காரணம் என்ன? | புட்பால் : சுசீந்திரனின் அடுத்தப்படம் | சீனு ராமசாமி தரும் அடுத்த பட்டம் | உருவத்தை மாற்றும் அதர்வா | விஜய்யை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | எமி ஜாக்சனின் அதிகப்படியான கவர்ச்சி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி | ஹிந்தி ரீமேக்கில் நயன்தாரா? | விஜய் - அஜித் - சூர்யா : தீபாவளி ரேஸில் விலகுவது யார்? | உடல் எடை பற்றி கிண்டல் : நித்யா மேனன் பதிலடி |
தமிழ்த் திரையுலகத்தில் ஏற்கெனவே பல பட்டங்கள் ரசிகர்களையும், மக்களையும் சூறாவளியாய் சுழற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பட்டங்கள் பொருத்தமாக அமைந்துள்ளன. காலப் போக்கில் அவர்களின் நிஜப் பெயர்களைச் சொல்லி அழைக்காமல் அவர்களது பட்டப் பெயரே நிலைத்து நிற்கும் அளவிற்கு அரசியலிலும், சினிமாவிலும் சிலர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்.
விஜய் சேதுபதி என்ற யதார்த்த நடிகரை திரையுலகத்தில் நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தைக் கொடுத்தார். அதை அந்த சமயத்தில் பலரும் கிண்டலடித்தார்கள். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கும் பிடித்த பட்டமாக அவருடைய பெயருடன் தற்போது ஒட்டிக் கொண்டுள்ளது.
அடுத்து, 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தை உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுக்கத் தயாராகிவிட்டார் சீனு ராமசாமி. “கண்ணே கலைமானே' படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத்தோன்றியது,” எனப் பதிவிட்டுள்ளார் சீனு.