லக்னோ, :உ.பி.,யின் அரசு ஆவணங்களில், சட்டமேதை அம்பேத்கர் பெயருடன், இனி, அவரது தந்தையின் பெயரான, ராம்ஜியையும் சேர்க்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான, அம்பேத்கரின் பெயரில், சிறிய மாற்றத்தை ஏற்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரசு ஆவணங்களில் இருந்த, 'பீம்ராவ் அம்பேத்கர்' என்ற பெயரை, இனி,
'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என மாற்றி, உ.பி., அரசு உத்தரவிட்டது.
அம்பேத்கரின்தந்தையின் பெயரான ராம்ஜி, அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பிற்படுத்தப்பட் டோர் ஓட்டுகளை கவருவதற்காக, அம்பேத்கர் பெயரை வைத்து, பா.ஜ., அரசியல் செய்வதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், அனுராக்படோரியா குற்றம் சாட்டினார்.
இதற்கு, மாநில அமைச்சர், சுவாமி
பிரசாத் மவுரியா அளித்த பதிலில் கூறியதாவது: அம்பேத்கரின் பெயரை சரியாக
எழுத, கவர்னர் ராம் நாயக் எடுத்த நடவடிக்கையால் தான், இந்த மாற்றம் செய்யப்
பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத் தில், அம்பேத்கர் என்று தான் கையெழுத்திடப்பட்டு உள்ளது.அவரது பெயர் தவறாக உச்சரிக்கப் படும் விபரத்தை, பிரதமர், முதல்வர் மற்றும் அம்பேத்கர் மகாசபையினர் கவனத்துக்கு, கவர்னர், ராம் நாயக் கொண்டு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து