பேச்சுவார்த்தையில் விஷால் வைத்த கோரிக்கை என்ன? | மம்முட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ; இயக்குனர் உறுதி | மஞ்சு வாரியர் மீது டிரைவர் குற்றச்சாட்டு | சித்தார்த்துக்கு மீண்டும் வில்லனான பாபி சிம்ஹா | மோகன்லாலின் கெட்டப்பை பார்த்து வியந்த கலா மாஸ்டர் | கமல்ஹாசனின் முடிவுக்கு காரணம் என்ன? | புட்பால் : சுசீந்திரனின் அடுத்தப்படம் | சீனு ராமசாமி தரும் அடுத்த பட்டம் | உருவத்தை மாற்றும் அதர்வா | விஜய்யை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தையடுத்து 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். 'ஏஞ்சலினா' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சுசீந்திரன் 'ஜீனியஸ்' என்ற பெயரில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் வேலைகளும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன். அந்தப்படத்துக்கு வித்தியாசமாக 'புட்பால்' என்று பெயர் சூட்டியுள்ளார்.
இந்த படத்தில் சுசீந்திரன் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் இசை அமைப்பாளராக பணிபுரிந்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சூர்யா, படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ஆண்டனி ஆகியோர் பணியாற்றவிருக்கிறார்கள்.
'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் நடித்த சுசீந்திரனின் மகன் நிக்ணு 'புட்பால்' படத்தில் கதாநாயகனின் சிறுவயது கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார் சுசீந்திரன்.