அம்பேத்கர் பெயருடன் அப்பா பெயர் சேர்க்க உத்தரவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அம்பேத்கர் பெயருடன் அப்பா பெயர் சேர்க்க உத்தரவு

லக்னோ :உ.பி.,யின் அரசு ஆவணங்களில், சட்டமேதை அம்பேத்கர் பெயருடன், இனி, அவரது தந்தையின் பெயரான, ராம்ஜியையும் சேர்க்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அம்பேத்கர் ,ராம்ஜி,உ.பி.,உத்தரவு


உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான, அம்பேத்கரின் பெயரில், சிறிய மாற்றத்தை ஏற்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, அரசு ஆவணங்களில் இருந்த, 'பீம்ராவ் அம்பேத்கர்' என்ற பெயரை, இனி, 'பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்' என மாற்றி, உ.பி., அரசு உத்தரவிட்டது. அம்பேத்கரின்தந்தையின் பெயரான ராம்ஜி, அவரது பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது.


இதற்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பிற்படுத்தப்பட் டோர் ஓட்டுகளை கவருவதற்காக, அம்பேத்கர் பெயரை வைத்து, பா.ஜ., அரசியல் செய்வதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், அனுராக்படோரியா குற்றம் சாட்டினார்.


இதற்கு, மாநில அமைச்சர், சுவாமி பிரசாத் மவுரியா அளித்த பதிலில் கூறியதாவது: அம்பேத்கரின் பெயரை சரியாக எழுத, கவர்னர் ராம் நாயக் எடுத்த நடவடிக்கையால் தான், இந்த மாற்றம் செய்யப்

Advertisement

பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத் தில், பி.ஆர். அம்பேத்கர் என்று தான் கையெழுத்திடப்பட்டு உள்ளது.அவரது பெயர் தவறாக உச்சரிக்கப் படும் விபரத்தை, பிரதமர், முதல்வர் மற்றும் அம்பேத்கர் மகாசபையினர் கவனத்துக்கு, கவர்னர், ராம் நாயக் கொண்டு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19+ 79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasu - Sydney,ஆஸ்திரேலியா
30-மார்-201809:29:08 IST Report Abuse

vasuஒரு பேர் மாற்றத்தால் , மக்களின் அரசியல் முடிவே மாறுமா ?

Rate this:
k.shanmugasundaram - trichy,இந்தியா
30-மார்-201809:19:20 IST Report Abuse

k.shanmugasundaramஅம்பேத்கர் பெயரை அம்பேத்கர்தான் மாற்ற முடியும். அடுத்தவர்கள் மாற்ற முடியாது. பள்ளிக்கூட ஆவணங்களில் அல்லது அரசாங்க கெசட்டில் அவருடைய பெயர் எவ்வாறு உள்ளதோ அதுதான் அவருடைய சரியான பெயர் ஆகும். இது மக்களை திசை திருப்ப மட்டும் பயன்படும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-மார்-201809:15:07 IST Report Abuse

balakrishnanஅம்பேத்கார் தாத்தா என்ன பாவம் செஞ்சார், அவங்க பேரையும் சேர்த்துக்குங்க, இந்த நாட்டுக்கு என்ன தேவையோ அதை செய்வதற்கு யாரும் தயாரா இல்லை, இப்ப இது தான் ரொம்ப முக்கியம், நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானையா

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
30-மார்-201808:31:35 IST Report Abuse

sankaseshanBR Ambekar (ie)Bhimrao Ramji iAmbedkar. What is wrong in this.In Maharashtra people always write father's name along with surname.All these days facts like this have been not known to public by Congress like Subash Bose,s sacrifices for freedom of nation. UP government has corrected this.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30-மார்-201808:24:16 IST Report Abuse

Srinivasan Kannaiyaகொன்று குவித்த மழலைக்களுக்கு இது பிராய சித்தமா...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
30-மார்-201807:33:08 IST Report Abuse

ஆரூர் ரங்காந்திக்கு தனை யாரும் மஹாத்மா என்று அளித்தல் பிடிக்கவே பிடிக்காது தன்னை ஒரு பாவ ஆத்மா என்றே கருதினார்.அதற்காக மஹாத்மா என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டோமா? அல்லது சம்ஸ்க்ருதம்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகவேண்டும் போன்ற அம்பேட்கரின் விருப்பங்களை நிறைவேற்றிவிட்டோமா?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-மார்-201809:17:10 IST Report Abuse

balakrishnanஇந்துமதத்தில் இருப்பது அவமானம் என்று அம்பேத்கார் கூறியிருக்கிறார், அதை எல்லாம் நாம் நிறைவேற்றினோமா, அவர் கடைசி காலத்தில் புத்த மதத்தில் சேர்ந்து, தன்மானத்தை காத்துக்கொண்டார், அதையாவது நாம் செய்தோமா,...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
30-மார்-201807:30:38 IST Report Abuse

ஆரூர் ரங்குகனோடு ஐவரானோம் என்று ஒரு மீனவனைக்கூட உடன்பிறந்த சகோதரனாக ஏற்று அரவணைத்த ராஜா ராமரல்லவா தீண்டாமையின் நிஜ எதிரி? அவர் பெயர் அம்பேட்கர் பெயரோடு இணைந்திருப்பது மிகமிகப் பொருத்தம்தான். அரசியல் சாசன தீர்மானத்தில்கூட பீம்ராவ் ராம்ஜி அம்பேட்கர் எனத்தான் கையொப்பம் இட்டிருக்கிறார்.இவர் மதம் மாறியதால் முன்னமே இறந்துபோன தந்தையின் பெயரையோ மதத்தையோ மாற்றமுடியுமா?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-மார்-201809:18:19 IST Report Abuse

balakrishnanகதைகளில் யாரும் யாரோடும் சேரலாம், நிஜத்தில் இணையமுடியுமா, கொன்னுப்புடுவாங்க,...

Rate this:
s t rajan - chennai,இந்தியா
30-மார்-201807:05:37 IST Report Abuse

s t rajanஇட ஒதுக்கீடு என்று அம்பேத்கார் பேரை பயன்படுத்தி தன் சந்ததிக்கே பதவிகள் பட்டங்கள் மட்டுமின்றி பணக்கொள்ளை செய்து கோடி கோடியாக சுருட்டி ஏழைகளை மிக ஏழைகளாக்கி வாங்கி வதைத்து 60 வருடமாக அராஜகம் பண்ணியவர்கள் தான் அம்பேத்கார் பெயரையே சொல்லத் தகுதியற்றவர்கள். மீண்டும் இந்த அரக்கர்கள் எப்படியாவது பதவியைப் பிடிக்கத் துடிக்கிறார்கள்.

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
30-மார்-201806:56:24 IST Report Abuse

அன்புமக்களின் உண்மையான வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், வெறும் அரசியல் மட்டுமே பிஜேபி செய்து வருகிறது. எல்லாமே மோடி பார்முலா. எவ்வளவு காலம் தான் இவர்கள் ஏமாற்றி கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மாதம் முப்பதாயிரத்திற்கு மேல் சம்பாரித்து வசதியாக இருப்பவர்கள் கூட ஓட்டிற்கு பணம் கேட்கிறார்கள். அது போன்று தான் இந்தியா முழுக்க முட்டாள்களின் கூடாரமாக திகழ்கிறது. ஓட்டிற்கு பணம் கிடைத்துவிட்டால், போதுமா? தூத்துக்குடியை போய் பாருங்கள். வாழ்வதற்கே வக்கில்லாமல் திண்டாடுகிறார்கள். முடி கொட்டுதல், கான்செர், அனீமியா, நோய் எதிர்ப்பு சத்து குறைவு, மலட்டு தன்மை, கண் எரிச்சல், ஆஸ்துமா என்று எண்ணிலடங்கா தொந்தரவுகள். மனிதர்கள் தான் ஓட்டிற்கு ஐநூறு ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு கான்செர் பெற்று கொள்கிறார்கள் என்றால், அந்த கடற்பகுதியில் வாழும் மீன்கள், நண்டுகள் மற்றும் பிற உயிரனங்கள் என்ன தவறு செய்தன? எந்த தவறும் செய்யாத அந்த உயிர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்ட அரசியல்வாதிகள் உருப்படமாட்டார்கள். அரசியல்வாதிகள் அந்த வாயில்லா ஜீவன்களின் உயிர்களுக்கு மட்டும் தான் பதில் சொல்ல வேண்டும். மனிதர்களுக்கு உரிய விலையை கொடுத்து தான் வாங்கி இருக்கிறீர்கள். அதனால் கவலை வேண்டாம். மக்கள் கான்செர் வந்தால், சுண்ணாம்பு வைத்து கொள்ளுங்கள். முடி கொட்டினால், பரியாரி செலவு மிச்சம். அனீமியா வந்தால் பத்து ரூபாய்க்கு வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதான் இனாமாக ஐநூறு ரூபாய் பெறுகிறீர்கள் அல்லவா? அதில் பத்து ரூபாய் செலவு செய்தால் குறைந்து விடமாட்டீர்கள். ஆஸ்துமா வந்தால் நல்லது. ஏனனில் சுவாசிக்கும் காற்றே விஷம் தான். அதனால் சுவாசிக்க முடியாமல் இருந்தால் தான் நல்லது. கண் எரிச்சல் ஏற்பட்டால், தண்ணீரை விடுங்கள். சரியாகிவிடும். மலட்டு தன்மை ஏற்பட்டால் இன்னும் நல்லது. இந்த கேடு கெட்ட வாழ்க்கை அடுத்த சந்ததியினருக்கே வேண்டாம். தமிழா சுயமரியாதையுடன் வாழ். எவனாவது இனி ஓட்டுக்கு பணம் என்று தேடி வந்தால், விரட்டு. இல்லையெனில் தூத்துக்குடி மக்களின் கதை தான் உனக்கும்.

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
30-மார்-201806:33:18 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேBR அம்பேத்கர் தானே, பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தானே, இதில் வேறு மாற்றம் உள்ளதா?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
30-மார்-201809:25:33 IST Report Abuse

balakrishnanஅவரோட பெயரை மாற்ற உங்களுக்கு என்ன அவசியம் வந்தது, அவங்க அப்பா பேரை போடுவதோ, அம்மா பெயரை போடுவதோ, தாத்தா பெயரை போடுவதோ, அது அவரின் இஷ்டம், அல்லது அவர்களின் வாரிசுகளின் உரிமை, உங்களுக்கு எதுக்கு இந்த வேலை, ( அரசியல் சட்டத்தில் B.R. Ambedkar - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றுதான் கையெழுத்திட்டுள்ளார்)...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement