நரகாசூரனிலிருந்து விலக தயார் ; கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்ட கவுதம் மேனன் | கவுதம் மேனன் தந்த அதிர்ச்சி மேல் அதிர்ச்சி | காலாவை முந்தும் விஸ்வரூபம் 2 ? | காத்திருக்கும் ரஜினி - அஜித் | வீட்டை மாற்றிய விஜய் | பிரஷாந்த்தின் மாஜி மனைவி வீட்டில் நகை கொள்ளை | மகளுக்கு கமல் தந்த அறிவுரை | மோகன்லாலுக்கு குருவாக நடிக்கிறார் மம்முட்டி..? | ராஜமவுலி படத்தில் வில்லனாக ராஜசேகர்..? | கௌதம் மேனன் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
'துருவங்கள் 16' இயக்குனர் கார்த்திக் நரேன், இயக்குனர் கவுதம் மேனன் இடையே பனிப்போர் வெடித்துள்ளது. நரகாசூரன் படத்தை தயாரித்த விதத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை உருவாகி உள்ளது.
கார்த்திக் நரேன் தன் டுவிட்டரில், "உங்களை நம்பி ஜோடி சேர்ந்து, இணைந்தேன். அதற்காக எங்களை குப்பையைவிடக் கேவலமாக நடத்தி, நாங்களே முதலீடு செய்ய வைத்தீர்கள். அதனால்தான் விட்டுச் செல்வது நல்லது என்று நினைத்தேன். தயவு செய்து இதை இன்னொரு இளம் படைப்பாளிக்கு செய்து விடாதீர்கள், வலிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு கவுதம் மேனன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
கார்த்திக் நரேனின் டுவீட் என்னை அதிருப்தியடைய செய்தது. மீடியாக்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அதனால் நானும் பதிலுக்கு டுவீட் செய்தேன். நான் அப்படி செய்திருக்க கூடாது, இதற்காக கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
கார்த்திக் நரேனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை எடுக்க வைத்தேன். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்றார், அதையும் செய்தோம். டீஸர், டிரைலர் எல்லாமே அவருடைய முடிவு தான். படத்தின் பிஜிஎம்-ஐ மேசிடோனியாவில் உருவாக்கினார். அதற்கும் ஏற்பாடு செய்தோம். நான் அழைத்து வந்த முதலீட்டாளர் மூலம் நிறைய செலவு செய்ய வைத்தேன்.
நரகாசூரன் படத்தில், நான் 50 சதவீதம் லாபம் கேட்கவில்லை. அந்தப்படத்தில் எனக்கு பங்கு இல்லை. படத்தை விட்டு வெளியேற வேண்டும் என கார்த்திக் விரும்பினால் மகிழ்ச்சி அடைவேன். சிலரின் பேச்சை கேட்டு நரேன் கோபமடைந்து இதுபோன்று செய்கிறார். நரகாசூரன் படத்தின் ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது.
பிற படங்கள் சந்திக்கும் பிரச்னைகளுடன் ஒப்பிடும்போது நரகாசூரன் படத்தின் பிரச்னை ஒன்றுமே இல்லை. ஒரு குழு நல்லபடியாக வேலை பார்த்தால் அதை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். கார்த்திக்கும், எனக்கும் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. விரைவில் படம் ரிலீஸாகும்.
இவ்வாறு கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.