சிம்பு போடும் புது கூட்டணி | என்டிஆர் - வாழ்க்கை வரலாறு படம், நாளை ஆரம்பம் | டாக்டர் கனவை கைவிட்ட சாய்பல்லவி | இன்று பேச்சுவார்த்தை, ஸ்டிரைக் முடிவுக்கு வருமா ? | ரஜினி படம் எனது கனவு : கார்த்திக் சுப்பராஜ் | பாகிஸ்தானிலும் பாகுபலி | திடீர் திருப்பம்... தனுஷ் இல்லை, சிம்பு... | அகில் படத்தை இயக்குகிறார் ராம்கோபால் வர்மா | லாலேட்டனை சந்தித்த ஹ்யூமேட்டன் | சமந்தா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் |
போபர்ஸ் பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை மணந்த பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோலியின் வெற்றியில் அனுஷ்காவிற்கு உயரிய பங்கு இருக்கிறது என்றும் போபர்ஸ் குறிப்பிட்டுள்ளது. சாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போபர்ஸ்.