டாக்டர் கனவை கைவிட்ட சாய்பல்லவி | இன்று பேச்சுவார்த்தை, ஸ்டிரைக் முடிவுக்கு வருமா ? | ரஜினி படம் எனது கனவு : கார்த்திக் சுப்பராஜ் | பாகிஸ்தானிலும் பாகுபலி | திடீர் திருப்பம்... தனுஷ் இல்லை, சிம்பு... | அகில் படத்தை இயக்குகிறார் ராம்கோபால் வர்மா | லாலேட்டனை சந்தித்த ஹ்யூமேட்டன் | சமந்தா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் | காஜல் அகர்வாலுக்கு சத்குரு அளித்த பரிசு | ஸ்டிரைக்கிற்கு இடையே வெளிவரும் நயன்தாரா படம் |
ஜெயம்ரவி நடிப்பில் 2008ல் வெளியான தாம்தூம் படத்தில் கதாநாயகி கங்கனா ரணாவத் தோழியாக நடித்த சாய்பல்லலி, கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மினுக்கு தோழியாக நடித்தவர்.
துணைநடிகையாக சில படங்களில் நடித்தவர், அதன் பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் படிப்புதான் முக்கியம் என்று சொன்னதால் ஜார்ஜியாவுக்கு சென்று டாக்டருக்கு படித்தார்.
அங்கு படித்துக் கொண்டு இருந்தபோதுதான் பிரேமம் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றதால் சாய் பல்லவியை தமிழில் நடிக்க வைக்க போட்டிகள் நடந்தன. இறுதியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சாய்பல்லவி.
கரு படம் வெளியாவதற்கு முன்பே தனுஷின் மாரி2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தற்போது கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் டாக்டராக பயிற்சி செய்யாமல் நடிப்பை மட்டும் தொடர முடிவு செய்துள்ளாராம்.