என்டிஆர் - வாழ்க்கை வரலாறு படம், நாளை ஆரம்பம் | டாக்டர் கனவை கைவிட்ட சாய்பல்லவி | இன்று பேச்சுவார்த்தை, ஸ்டிரைக் முடிவுக்கு வருமா ? | ரஜினி படம் எனது கனவு : கார்த்திக் சுப்பராஜ் | பாகிஸ்தானிலும் பாகுபலி | திடீர் திருப்பம்... தனுஷ் இல்லை, சிம்பு... | அகில் படத்தை இயக்குகிறார் ராம்கோபால் வர்மா | லாலேட்டனை சந்தித்த ஹ்யூமேட்டன் | சமந்தா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் | காஜல் அகர்வாலுக்கு சத்குரு அளித்த பரிசு |
தமிழ்த் திரையுலகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது. அதன் பின் கடந்த நான்கு வெள்ளிக்கிழமைகளாக புதிய படங்கள் எதுவும் வரவில்லை. தயாரிப்பாளர் சங்க உத்தரவை மீறி ஒரே ஒரு படம்தான் வெளியானது. மார்ச் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.
ஸ்டிரைக்கிற்கு முக்கியக் காரணமாக இருக்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கான விபிஎப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்ட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது. மேலும், சில புதிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. திரையுலகத்தின் சீர்திருத்தத்திற்காக நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் கடைசி கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கு உரிமையாளர்களுடன் இன்று மீண்டும் தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். இதில், ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்ல உள்ளார்களாம். அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதித்தால் ஸ்டிரைக் இன்றுடன் முடிவடையும் என்கிறார்கள். அப்படி முடிவடைந்தால் அடுத்த வாரம் ஏப்ரல் 6ம் தேதியிலிருந்து புதிய படங்கள் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். இல்லையென்றால் ஸ்டிரைக் தொடர்ந்து அடுத்த மாதமும் தொடரும் என்கிறார்கள்.
தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்களின் நிபந்தனை ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் கேள்வி. ஸ்டிரைக் தொடர்வதும், தொடராததும் அவர்கள் கையில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.