காவிரி விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிகிறது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, மத்திய அரசு இதுவரை, உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒன்பது பேர் கொண்ட மற்றொரு குழுவை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இக்குழு அமைக்கப்படும்
பட்சத்தில், இதில், தமிழக அரசின் பிரதிநிதி களாக, பொதுப்பணித் துறை செயலர், பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர், சுப்பிரமணியம் உள்ளிட்ட, அதிகாரிகள்
இடம் பெறுவர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும் என்ற குரல்,
தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வருகிறது. இது, தமிழக அரசுக்கு கடும்நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.
'உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முடிவு செய்யப் படும்' என, முதல்வர் பழனிசாமி கூறி வந்தார். இன்றுடன் காலக்கெடு முடியவுள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க, சென்னை, தலைமை செயலகத்தில், இன்று கூட்டம் நடக்கிறது. அதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இக்கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, முடிவெடுக்கப்படஉள்ளது.
அவகாசம் முடியும் வரை காத்திருப்பு
''காவிரி
மேலாண்மை வாரிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள, ஆறு வார கால
அவகாசம்
முடிந்த பின் தான், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,
முதல்வர் பழனிசாமி தெரி வித்து உள்ளார்.சேலம் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விதித்துள்ள, ஆறு வார கால அவகாசத்துக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும். மத்திய அரசு, நல்ல தீர்வு காணும் என, எதிர்பார்க்கிறோம். இது, எங்களுக்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் ஒட்டு மொத்த, டெல்டா பாசன விவசாயிகளின் உணர்வாக உள்ளதால், மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து