புதுடில்லி: ''கர்நாடகா சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் கமிஷனின் சமூக ஊடக கூட்டாளியாக 'பேஸ்புக்' செயல்படும்,'' என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.
டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்
கூறியதாவது:சமூக ஊடகங்களில் அளிக்கப்படும் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப் பட்டதாக, சமீபத்தில் புகார் எழுந்தது. இதுபோன்ற விஷயங்கள் நவீன தொழில் நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன் படுத்துவதை தடுக்காது. வங்கிகளில் மோசடிகள் நடந்ததாக செய்தி வெளியாவதால் வங்கிகளை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா
அரசியல் தலைவர்கள், கட்சிகளின் அலைபேசி 'ஆப்' தகவல்கள், அதை பயன்படுத்துவோரின் அனுமதி இன்றி முறைகேடாக பகிர்ந்து கொள்வதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து தேர்தல்கமிஷனின் சமூக ஊடக பிரிவு விசாரிக்கும்.கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலின்
போது தேர்தல் கமிஷனின் சமூக ஊடக கூட்டாளியாக பேஸ்புக் செயல்படும்.
பேஸ்புக் பக்கத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்தி
வருகிறது. இளம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதை பேஸ்புக் மூலம் தேர்தல் கமிஷன் வலியுறுத்தி வருகிறது. இந்திய தேர்தலை சமூக ஊடகங் கள் பாதிக்காத வகை யில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து