வடசென்னை என் கனவை நனவாக்கிய படம் : ஐஸ்வர்யா ராஜேஷ் | விஜய் ஆண்டனியை வித்தியாசப்படுத்தும் காளி | தெலுங்கு ரீ-மேக்கில் தனுஷ் உண்மையா? | விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா ஏன் பிடிக்கும் தெரியுமா? | ராஜமவுலி படத்தில் குத்துசண்டை வீரராக ராம்சரண் | சூர்யா தந்த பரிசு, கிண்டலடித்த தயாரிப்பாளர் | மஞ்சு வாரியருக்கு ஜோடியாக நடிக்கும் நரேன் | வாய்ப்பை கோட்டைவிட்ட சித்தார்த் | செயின் ஸ்மோக்கராக மாறிய தனுஷின் வில்லன் | கதையை இறுதி செய்த மோகன்லால் - பிருத்விராஜ் |
மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தனர். இப்போது மீண்டும் அதே தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதுபற்றி அவர் கூறுகையில், காக்கா முட்டை படத்தில் தனுஷின் தயாரிப்பில் நடித்தபோது, எதிர்காலத்தில் எப்படியேனும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்த மாதிரி அது உடனே நடக்கவில்லை. தனுசுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது.
இப்போது வடசென்னை படம் மூலம் அது நனவாகியிருக்கிறது. நான் நடித்து வரும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தார். அதன்பிறகு சமந்தா நடிக்கயிருந்தார். இப்போது நான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் தனுசுடன் நடிக்க வேண்டுமென்று மனதுக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்ததினால் தானோ என்னவோ அந்த வாய்ப்பு வேறு யாருக்கும் செல்லாமல் என்னைத்தேடி வந்து விட்டது என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ், வெற்றிமாறன் என்ற இரண்டு பெரிய ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்கிறார் ஐஸ்வர்யா.