ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்' | ரஜினி படங்களை பார்த்த ராம்சரண் தேஜா | இளையராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் | திறந்திருக்கும் தியேட்டர்கள், திரளாத கூட்டம் | புதியவர்களின் கூட்டணியில் உருவாகும் திரில்லர் படம் அமுதா | மீண்டும் வந்தார் ஜூலி | நடிகைக்காக கடவுள் வெயிட்டிங் | நமது கூட்டம் அரசு அமைக்க வேண்டும்: கமல் | பல்கலைகழக ரேங்க் பெற்ற கவுதமி நாயர் | ஸ்ரீவித்யா வீட்டை ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை |
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த கோடை விடுமுறையில் முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ராம்சரண் நடிக்கும் 'ரங்கஸ்தலம்' இந்த வாரம் மார்ச் 30ம் தேதியும், மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படம் ஏப்ரல் 20ம் தேதியும், அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'நா பேரு சூர்யா' படம் மே 4ம் தேதியும் வெளியாக உள்ளது. இந்த கோடை விடுமுறைப் போட்டியில் முதல் படமாக முந்திக் கொண்டு வருகிறது ராம்சரணின் 'ரங்கஸ்தலம்'.
இப்படத்தின் ஹிந்தி உரிமை எதிர்பார்த்த்தை விட பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். சமீப காலமாக தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆகும் படங்கள் யு டியூபில் பெரிய சாதனை படைத்து வருகிறது. அதனால், இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களை ஹிந்தி டப்பிங் உரிமைக்காக போட்டி போட்டு வாங்குகிறார்களாம். இப்படத்தை தமிழ்நாட்டில் திரையுலக ஸ்டிரைக் முடிந்த பிறகு தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதையடுத்து மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
தமிழ்த் திரையுலகத்தில் கோடை விடுமுறையில் பல படங்கள் வெளியீட்டிற்காக்க் காத்துக் கொண்டிருக்கின்றன. திரையுலக ஸ்டிரைக் முடிந்த பிறகு புதிய படங்களின் வெளியீடுகள் வரிசைகட்டி நிற்க வாய்ப்புள்ளது.