ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்' | ரஜினி படங்களை பார்த்த ராம்சரண் தேஜா | இளையராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் | திறந்திருக்கும் தியேட்டர்கள், திரளாத கூட்டம் | புதியவர்களின் கூட்டணியில் உருவாகும் திரில்லர் படம் அமுதா | மீண்டும் வந்தார் ஜூலி | நடிகைக்காக கடவுள் வெயிட்டிங் | நமது கூட்டம் அரசு அமைக்க வேண்டும்: கமல் | பல்கலைகழக ரேங்க் பெற்ற கவுதமி நாயர் | ஸ்ரீவித்யா வீட்டை ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை |
பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா, தென்னிந்திய மொழிகளில் 3 தலைமுறை நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தனது 53-வது வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. 1250 சதுர அடிகளை கொண்ட வீடு அது. தற்போது அதில் வேறொருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டை ஸ்ரீவித்யாவின் தம்பி நிர்வகித்து வருகிறார். ஸ்ரீவித்யா 45 லட்சம் ரூபாய் வருமானபாக்கி வைத்திருந்தார். இதற்காக அபிராமபுர வீட்டை வருமானவரித்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தது. வாடகைக்கு குடியிருப்பவர் வருமானவரித்துறையிடம் வாடகை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் வருமானவரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கிக்காக வீட்டை ஏலத்தில் விட வருமானவரித்துறை முடிவு செய்தது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ஒரு கோடியே 17 லட்சம் நிர்ணயம் செய்தது. ஏல அறிவிப்பை தொடர்ந்து பலர் ஸ்ரீப்ரியாவின் வீட்டைப் பார்த்துச் சென்றனர். திட்டமிட்டபடி நேற்று ஏலம் விட இருந்தனர். ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலம் விடுவது தள்ளி வைக்கப்பட்டது. மிகவும் பழமையான வீட்டுக்கு ஒரு கோடியே 17 லட்சம் என்பது கூடுதலான தொகை என்று வீட்டை பார்த்துச் சென்றவர்கள் கூறியிருக்கிறார்கள்.