ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்' | ரஜினி படங்களை பார்த்த ராம்சரண் தேஜா | இளையராஜா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் | திறந்திருக்கும் தியேட்டர்கள், திரளாத கூட்டம் | புதியவர்களின் கூட்டணியில் உருவாகும் திரில்லர் படம் அமுதா | மீண்டும் வந்தார் ஜூலி | நடிகைக்காக கடவுள் வெயிட்டிங் | நமது கூட்டம் அரசு அமைக்க வேண்டும்: கமல் | பல்கலைகழக ரேங்க் பெற்ற கவுதமி நாயர் | ஸ்ரீவித்யா வீட்டை ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை |
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா, சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படம் வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. 80களில் நடக்கும் கதையாக கிராமத்துப் பின்னணியில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
ராம்சரண், சிட்டிபாபு என்ற கிராமத்து இளைஞராகவும், சமந்தா, ராமலட்சமி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இருவருமே மாநகரத்தில் வாழ்ந்தவர்கள். அதனால், அவர்கள் கிராமத்துக் கதாபாத்திரங்களில் எப்படி நடிப்பார்கள் என்ற சந்தேகம் படத்தின் டீசர் வந்ததுமே தீர்ந்துவிட்டது.
ராம்சரண், சமந்தா இருவரும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தில் 80களின் ஹீரோவாக நடிப்பதற்கு என்ன செய்தேன் என்பது பற்றி ராம்சரண் தெரிவித்துள்ளார்.
“அப்பா சிரஞ்சீவி நடித்த 80களின் படங்களான 'ஊரிக்கிச்சின மாட்டா, மன ஊரி பாண்டவலு, ஆபத்பாந்தவடு” ஆகிய படங்களையும், ரஜினிகாந்த் நடித்த சில படங்களையும் இயக்குனர் சுகுமார் பார்க்கச் சொன்னார். அவர்களது தோற்றத்தையும், நடிப்பையும் எனக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளேன்,” என ராம்சரண் தெரிவித்துள்ளார்.