பெங்களூரு:''கர்நாடகாவில், விவசாயிகள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், காங்., அரசே காரணம்,'' என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
கர்நாடகாவில், சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா அம்மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தாவனகரேயில் நேற்று நடந்த கூட்டத்தில், அமித் ஷா பேசியதாவது:
பா.ஜ., ஆட்சியில் உள்ள, குஜராத், ம.பி., சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், விவசாயிகள் தற்கொலை மிகக் குறைவு. அதுவும், அவர்களின் தனிப்பட்ட பிரச்னை களுக்காக நிகழ்ந்தவை. மாறாக, கர்நாடகா வில், விவசாயிகள் தற்கொலை அதிகமாக உள்ளது. இங்கு, விவசாயிகள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், ஆளும், காங்., கட்சியே காரணம்.கர்நாடகா அரசில் ஊழல்
மலிந்து கிடக்கிறது. இம்மாநிலத்தின் முதல்வர், சித்தராமையா,40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை வைத்திருக்கும், ஒரே சமத்துவ
தலைவராக திகழ்கிறார்; இதுவே, அவரது ஊழல் ஆட்சிக்கு உதாரணம்.
மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள,பா.ஜ., தலைமை யிலான அரசு, விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், மஹாராஷ்டிராவில், விவசாயிகள் தற்கொலை வெகுவாக குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும் நோக்கில், பிரதமர், நரேந்திர மோடி திட்டங்களை வகுத்து வருகிறார்.
கர்நாடகாவில் உள்ள, காங்., அரசு, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வருகிறது. இந்துக் களையே அது பிளவுபடுத்துகிறது. மாறாக, பிரதமர், மோடி, ஹிந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவரையும் ஒருங்கிணைக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
'ஊழல்வாதி' எடியூரப்பா?
கர்நாடகாவில், தேவநகரியில் நடந்த கூட்டத்தில் பேசிய,பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, பா.ஜ.,வை சேர்ந்த, எடியூரப்பாவை, ஊழல் பேர்வழி எனப் பேசியதால், சலசலப்பு ஏற்பட்டது.
அமித் ஷா பேசியதாவது:'நம் நாட்டில், மிக
மோசமான ஊழல் அரசை பற்றி கூற வேண்டு மானால், அது, எடியூரப்பாவின் அரசாகத்தான் இருக்க வேண்டும்; எடியூரப்பா அரசு, ஊழலில் முதலிடத்தில் உள்ளது' என, ஓய்வு பெற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த எடியூரப்பா, என்ன சொல்வதென தெரியாமல் திகைத்தார். சில வினாடிகளில், தான் தவறாக பேசியதை உணர்ந்த அமித் ஷா, தவறை திருத்திக் கொண்டார். சித்தராமையா என கூறுவதற்கு பதிலாக, எடியூரப்பா என கூறி விட்டதாக, அவர் தெரிவித்தார்.இதனால், அங்கு சலசலப்பு நிலவியது. அதேசமயம், இந்த வாய்ப்பை, காங்., நன்கு பயன்படுத்தியது. எடியூரப்பாவை ஊழல்வாதி என, அமித் ஷா கூறும் வீடியோ காட்சியை, சமூக வலை தளங்களில், காங்., கட்சியினர் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து