விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா ஏன் பிடிக்கும் தெரியுமா? | ராஜமவுலி படத்தில் குத்துசண்டை வீரராக ராம்சரண் | சூர்யா தந்த பரிசு, கிண்டலடித்த தயாரிப்பாளர் | மஞ்சு வாரியருக்கு ஜோடியாக நடிக்கும் நரேன் | வாய்ப்பை கோட்டைவிட்ட சித்தார்த் | செயின் ஸ்மோக்கராக மாறிய தனுஷின் வில்லன் | கதையை இறுதி செய்த மோகன்லால் - பிருத்விராஜ் | காமெடி நடிகரின் படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாயில் திருவிழா செட் | நடிகை ஜெயந்தி நலமுடன் உள்ளார் | ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் வெளியாகும் 'ரங்கஸ்தலம்' |
நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஆகிய இருவரும் சில வருடங்களாகவே காதலித்து வந்தபோதும், சமீபத்தில் ஒரு விருது விழா மேடையில், நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்து பெற்றோர், சகோதரர் மற்றும் காதலருக்கு நன்றி என்று கூறினார். ஆக, இப்போதுதான் காதலரை வெளிப்படையாக சொல்லத் தொடங்கியிருக்கிறார் நயன்தாரா. இதையடுத்து அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு டிவி சேனலின் இசை நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தன்னை எப்படி கவர்ந்தார் என்பது குறித்து கூறினார்.
அதாவது, நயன்தாரா எனது பேவரிட் நடிகை. அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்மணி அவர். அதன் காரணமாக அவரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அந்த வகையில், நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன் என்றார் விக்னேஷ் சிவன்.