சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக், மோசடி புகாரில் சிக்கியுள்ளார். என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டில், அவர் செய்த முறைகேடு அம்பலமாகி உள்ளது. சட்ட பல்கலையில், வழக்கறிஞர் படிப்பில், அவர் முறைகேடாக சேர்ந்தது தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலையின், முன்னாள் துணை வேந்தர், ராஜாராம், சட்ட பல்கலையின், முன்னாள் துணை வேந்தர், வணங்காமுடி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங் களில், 2 நாட்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர். இருவரது வீடுகளிலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.இது தொடர்பாக, சட்ட பல்கலையின் பொறுப்பு பதிவாளர் பாலாஜியிடம், முதல் கட்ட விசாரணை நடந்தது. அதில், பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகின.
விரைவில் கைது
இதையடுத்து, வணங்காமுடி, பதிவாளர், பாலாஜி, துணை பதிவாளர், அசோக்குமார், தொலைநிலை கல்வி இயக்குனர், ஜெய்சங்கர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ராஜேஷ் ஆகிய, ஆறு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை யில், சசிகலாவின் அண்ணன் மகனும்,
ஜெயா, 'டிவி' முதன்மை செயல் அதிகாரியு மான, விவேக், தமிழ்நாடு அம்பேத்கர் அரசு சட்ட பல்கலையில், எல்.எல்.பி., படிக்க, விதிகளை மீறி, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் இடம்பெற்றது தெரிய வந்துள்ளது.
அதனால்,
அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக, வணங்காமுடி உள்ளிட்ட, ஆறு பேர்
மீதும், கிரிமினல் நடவடிக்கை பாயும் என, தெரிகிறது. இவர்கள் அனைவரும்,
விரைவில் கைது செய்யப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.துணை வேந்தராக இருந்த, வணங்காமுடியின் பதவிக் காலம், 2016 அக்.,31ல் முடிந்துள்ளது.அவருக்கு, 2017 ஜூன் வரை, பேராசிரியராக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பல்கலையின் பதிவாளர், பாலாஜி பிறப்பித்து உள்ளார். இது, முறைகேடான உத்தரவு என, போலீசார் கண்டறிந்துள்ளனர்.
விதிமீறல்
கடந்த, 2016 - 17ல், 93 பேர், என்.ஆர்.ஐ., ஒதுக் கீட்டில், எல்.எல்.பி., படிப்பில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 75 பேருக்கு, விதிகளை மீறி சேர்க்கை வழங்கப்பட்டு உள்ளது. அதில், ஒரு மாணவராக, இளவரசியின் மகன் விவேக், தேவையான சான்றிதழ்கள் எதுவும் இல்லாமல், படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கு, பல்கலை துணைவேந்தர் மற்றும் அதிகாரிகள், உடந்தையாக இருந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
சமர்ப்பிக்காத ஆவணங்கள்!
என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டில், சட்ட பல்கலை படிப்பில் சேர,11 வகை ஆவணங்கள், கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இவற்றில், 6 வகை ஆவணங்களை, விவேக் சமர்ப்பிக்கவில்லை.
மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், எந்த வெளிநாட்டில் வசிக்கிறாரோ, அந்த நாட்டின், இந்திய துாதரகத்தில் பெறப்பட்ட சான்றிதழ்; என்.ஆர். ஐ., வங்கி கணக்கு புத்தகம்; மாணவருக்கும், வெளிநாடு வாழ் இந்தியருக்குமான உறவு சான்றிதழ். தமிழக பல்கலைகளில், ஏதாவது ஒன்றில் பெறப்பட்ட கல்வித் தகுதி சான்றிதழ்; பெற்றோர் மற்றும் மாணவர் இணைந்து வழங்கும் கூட்டு உறுதி மொழி கடிதம், மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில், 20 ரூபாய் முத்திரை தாளில் கையெழுத்திடப்பட்ட உறுதிப் பத்திரம் ஆகிய வற்றை, விவேக் வழங்காமல், மோசடியாக, என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடு பெற்றுள்ளார்.
'விவேக் சிறை செல்வார்!'
''சட்டப் படிப்பில் சேர, விவேக், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தது நிரூபணமானால், அவர் சிறை செல்வார்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அவரது பேட்டி: 'நியூட்ரினோ திட்டம்' மட்டுமின்றி, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, எந்த ஒரு திட்டமும், தமிழகத்தில் நிறைவேற்றப்படாது. எந்த ஒரு திட்டத்திற்கும், மக்களின் கருத்து, மிகவும் அவசியம். இது, மக்களின் அரசு.
துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத் தில், அம்மாவட்ட மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், அ.தி.மு.க., மாவட்ட செயலரே, அந்த ஆலைக்கு எதிராக, கலெக்ட ரிடம் மனு அளித்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், ஒப்புதல் அளிக்கப் பட்டாலும், அதற்கு திறப்பு விழா நடத்தப் பட்டது, தி.மு.க., ஆட்சியில் தான். சசிகலா குடும்பத்தினர் அனைவரும், மோசடி யில் ஈடுபடுபவர்கள். இளவரசி மகன் விவேக், சட்டப் படிப்புக்காக, என்.ஆர்.ஐ., ஒதுக் கீட்டில், போலி ஆவணங்களை சமர்ப்பித்தது நிரூபண மானால், அவர் சிறை செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (32)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply