காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படா விட்டால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த ஆறு வார அவகாசம், நாளையுடன் முடிவடை கிறது.ஆனால், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, மற்றொரு பெயரில் குழு அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்,முதல்வர் பழனிசாமியின் முதன்மை செயலர், சாய்குமார்
தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று டில்லி சென்றது. இதில், பொதுப்பணித்துறை செயலர், பிரபாகர், காவிரி
தொழில்நுட்ப பிரிவு தலைவர், சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தமிழக
அரசு வழக்கறிஞர்கள் இடம்பெற்று இருந்தனர்.
மத்திய நீர்வளத்துறை செயலர், யு.பி.சிங் மற்றும் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அதிகாரிகள் குழுவினர், டில்லியில், மத்திய நீர்வளத்துறை செயலரை சந்தித்து பேசினர். அதன்பின், மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்களை சந்தித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்தினர். தமிழக தலைமை செயலர் எழுதிய கடிதத்தையும்கொடுத்துள்ளனர். அப்போது, மேலாண்மை வாரியத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக, தமிழக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,தமிழக அரசின் சார்பில், இவ்வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்கள், சேகர்,
சுப்ரமணிய பிரசாத்,உமாபதி ஆகியோரிடம், தமிழக அதிகாரிகள்
குழு ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் உள்ளஉயர் அதிகாரிகளிடமும், மொபைல் போன் வாயிலாக,ஆலோசனை கேட்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத் தின் பெயரை மாற்றக்கூடாது. ஒருவேளை பெயரை மாற்றி னாலும், அதற்குள்ள அதிகாரங்களை குறைக்க கூடாது என, தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கா விட்டால், தமிழகம் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து