Rahul Gandhiji, Even "Chhota Bheem" Knows Better: Smriti Irani's Jab On Data Row | தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபம் ராகுல் - ஸ்மிருதி இரானி கடும் மோதல் Dinamalar
பதிவு செய்த நாள் :
தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபம்
ராகுல் - ஸ்மிருதி இரானி கடும் மோதல்

புதுடில்லி,: 'பிரதமர், நரேந்திர மோடி, 'இந்தியர்களை உளவு பார்க்கும் பெரிய முதலாளி' என, காங்., தலைவர், ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபம்  ராகுல் - ஸ்மிருதி இரானி கடும் மோதல்

அதற்கு பதிலடி தரும் வகையில், 'மொபைல் 'ஆப்'பில் சாதாரணமாக கேட்கப்படும் கேள்விகள், உளவு பார்ப்பதற்காக அல்ல என்பது, சோட்டா பீமுக்கு கூட தெரியும்' என, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில், அதை பயன்படுத்துவோரின் தகவல்கள், பிரிட்டனைச் சேர்ந்த, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, உலகம் முழுவதும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவைகளை, இந்தியாவில், காங்., கட்சியும் பயன்படுத்தி உள்ளதாக, மத்தியில் ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதற்கு பதிலடியாக, பிரதமர், நரேந்திர மோடியின், 'நமோ ஆப்' மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக, காங்., கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வீடியோ பதிவுகள்



தகவல் திருட்டு தொடர்பாக, நேற்றும், காங்., - பா.ஜ., தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரை

ஒருவர் குற்றஞ்சாட்டி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளதாவது:பிரதமர், மோடியின் 'நமோ ஆப்' மூலம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. அந்த ஆப், அதை பயன்படுத்துவோரின் ஆடியோ, வீடியோ பதிவுகள், நண்பர்கள், உறவினர்களின் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ரகசியமாக பதிவு செய்கிறது.ஜி.பி.எஸ்., மூலம், தனி நபர்கள் இருக்கும் இடங்கள் கூட உளவு பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்க்கும் பெரிய முதலாளியாக, பிரதமர், நரேந்திர மோடி செயல்படுகிறார்.தற்போது, இந்திய குழந்தைகளின் தகவல்களையும், மோடி, திருட நினைக்கிறார். நாடு முழுவதும், என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த, 13 லட்சம் மாணவர்கள், நமோ ஆப்பை தரவிறக்கம் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய திரட்டை உருவாக்க, தன் பதவியை, பிரதமர், மோடி முறைகேடாக பயன்படுத்துகிறார்.

நாட்டுக்கு சொந்தம்



அரசால் உருவாக்கப்பட்ட, நமோ ஆப் மூலம், மக்களின் தகவல்கள் திருடப்பட்டு, சேகரிக்கப்படு கின்றன. இந்த தகவல்கள், நாட்டுக்கு சொந்தம்; மோடிக்கு அல்ல.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, 'டுவிட்டர்' சமூக தளத்தில்கூறியுள்ளதாவது:மொபைல் ஆப்களில், சாதாரணமாக கேட்கப்படும் கேள்விகள், தகவல்களை உளவு பார்ப்பதாக கருதப்படாது; இது, கார்ட்டூன் கதாபாத்திரமான, சோட்டா பீமுக்கு கூட நன்றாக தெரியும்.நமோ ஆப்பை அழிப்பதற்கு பதில், காங்., தலைவர், ராகுலின் ஆட்கள், காங்., ஆப்பை அழித்துள்ளனர். ராகுல் நினைப்பதற்கு மாறாக, காங்கிரசார்

Advertisement

செயல்பட்டு வருகின்றனர்.காங்., கட்சியின் ஆப்பில் இடம்பெறும் தகவல்கள், சிங்கப்பூரில் உள்ள, கம்ப்யூட்டர் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், யார் வேண்டுமானாலும், அத்தகவல்களை கையாள முடியும். இதற்கு, ராகுலால் பதில் சொல்ல முடியுமா?
இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர், அமித் மாளவியா கூறியதாzவது:

உறுப்பினர் சேர்க்கை



காங்., கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இணையதளம் தற்போது செயல்பாட்டில் இல்லை. அந்த இணையதளத்தை அணுக முயன்றால், 'இணையதளத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன' என்ற வார்த்தைகள் தோன்றுகின்றன. காங்., எதை மறைக்க முயற்சிக்கிறது எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதில் அளித்த, காங்., சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளரும், நடிகையுமான, குத்து ரம்யா, ''பா.ஜ., குறிப்பிட்டுள்ள, காங்., கட்சியின் இணையதளம், தற்போது செயல்பாட்டில் இல்லை. அதற்கு பதிலாக, காங்., கட்சி இணையதளம் மூலம், உறுப்பினர் சேர்க்கை பணி நடக்கிறது,'' என்றார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (3+ 51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-மார்-201805:04:37 IST Report Abuse

Sanny இவங்க இரண்டுபேரின் சண்டை எப்போ தீருமோ? ஒன்னு புரியுது, ராகுலை சீண்ட ராணி அம்மாவுக்கு ரொம்ப புடிக்கும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201804:21:32 IST Report Abuse

Kasimani Baskaranகாங்கிரஸ் கீழ்த்தரமாக பல தேசவிரோத அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வைத்து இருக்கிறது... அவர்கள் எப்பொழுதும் வேண்டாத வேலைகளை செய்வதில் பெயர் பெற்றவர்கள்... இப்பொழுதெல்லாம் மல்லுக்கட்டுவதை வைத்து பார்த்தால் காங்கிரஸ் தலைவர் இராகுல் பத்திரிக்கை நிருபர் போல கூவுகிறார்...

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மார்-201803:45:31 IST Report Abuse

J.V. Iyerகோமாளி பப்பு ராகுல்ஜியின் பேச்சு மிகவும் வேதனை அளிக்கிகிறது. எல்லாம் பதவி செய்யும் மாயம். இவர் பிரதமர் பதவி கனவு, பகல் கனவுதான். அம்பேல்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement