கோவை: ''கடப்பாரையால் நெம்பினாலும், அ.தி.மு.க., ஆட்சியை அசைக்க முடியாது,'' என, கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.
ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், கோவையில் நேற்று, 86 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
வலுவிழப்பு
அதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மதச்சார்பற்ற அரசு என்பதற்கு, இத்திருமண நிகழ்ச்சியே சான்று. எங்களுக்கு மதங்களில் வேறுபாடு இல்லை; அனைவரும் சமம். எம்.ஜி.ஆர்., - ஜெ., என, இருவர் வழியில் செல்கிறோம்.'சொடக்கு போட்டால், அ.தி.மு.க., ஆட்சி இருக்காது' என, ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடப்பாரையால் நெம்பினாலும், ஆட்சியை அசைக்க முடியாது. ஏற்கனவே நீங்கள் எடுத்த
முயற்சி வலுவிழந்து விட்டது.வரலாறு காணாத அளவுக்கு சட்டசபையில் அமளி செய்தனர்; ரகளையில்
ஈடுபட்டனர். அப்போது கூட, நாங்கள் தாக்குப்பிடித்து, அதையும் முறியடித்து,ஆட்சியை காப்பாற்றி, சிறப்பாக நடத்தி வருகிறோம்.அவர்களின் கனவு, பகல் கனவாகவே இருக்கும்; அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. இனி, ஆட்சியை கலைக்கலாம் என, கனவிலும் நினைக்காதீர்; நினைத்தாலும் பலிக்காது.மத்திய ஆட்சியில், 14 ஆண்டுகள், தி.மு.க., அங்கம் வகித்திருக்கிறது. மத்திய, பா.ஜ., ஆட்சியிலும் அங்கம் வகித்தனர்; காங்கிரஸ் ஆட்சியிலும் அங்கம் வகித்தனர். மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தனர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
சட்ட போராட்டம்
ஜெ., சட்டப்போராட்டம் நடத்தி, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை பெற்றார்.
மத்தியில், தி.மு.க., அங்கம் வகித்தபோதே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம்; காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்திருக்கலாம்;
செய்திருந்தால், இப்போது ஏற்பட்டு இருக்கும் பிரச்னைக்கு இடமில்லாமல் போயிருக்கும்.மத்தியில் அதிகாரம் பெற வேண்டும் என மட்டுமே, தி.மு.க.,வினர் சிந்தித்தனர். மக்களுக்கு தேவையானதை கேட்டுப் பெற, அவர்கள் நினைக்கவில்லை.காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவை, ஆறு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 29ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதற்குள் மத்திய அரசு அமைக்குமென எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், அடுத்த நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழக மக்கள் உரிமையை பெற, அ.தி.மு.க., அனைத்து முயற்சியும் எடுக்கும்.இவ்வாறு, முதல்வர் பழனிசாமி பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply