காமெடி நடிகர் ராம்தாஸ் திருமணம் | தோள்பட்டை காயம் : ஹிந்தி படத்திலிருந்து விலகிய மாதவன்! | விமர்சனத்தை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத அரசு : கமல் | தமிழில் வருகிறது நயன்தாராவின் மலையாளப்படம் | இலங்கையில் எங்க வீட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பு : பொதுமக்கள் எதிர்ப்பு | சாலை பாதுகாப்புக்கு உதவிய பிரியா வாரியரின் கண்ணசைவு | சர்ச்சை கருத்து : இளையராஜா வீடு முற்றுகை | விமான தொழில்நுட்பம் அறிய மாணவர்களுடன் அஜித் சந்திப்பு | சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி |
ஆளும் அரசை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித்தலைவர்களின் பேட்டிகளை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் அந்த மாதிரி தொலைக்காட்சிகளை அரசு கேபிளில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலுக்கு பயந்தே அரசு நடத்தும் நிகழ்ச்சிகளை சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன் நினைவிலும் கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியங்களில் ஒன்று என பதிவிட்டுள்ளார்.