தெலுங்கில் டப்பிங் பேசும் துல்கர் சல்மான் | வெப்சீரிஸில் சுனைனா | படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தும் ரகுல் ப்ரீத் சிங் | கணவர் படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா | தாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல் | டுவிட்டருக்கு திரும்பிய ராதிகா | கார்த்திக் சுப்பராஜ்க்கு காலா தந்த கால அவகாசம் | ஏப்ரலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால் | அல்போன்ஸ் புத்ரனின் புதிய நாயகி | மீண்டும் கதையின் நாயகியாக அனுஷ்கா! |
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பிசியாக நடித்து வருபவர் திரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடி விட்ட அவருக்கு ரஜினியுடன் டூயட் பாடும் அதிர்ஷ்டம் மட்டும் இன்னும் அடிக்கவில்லை. அதனால் ரஜினியின் ஒவ்வொரு புதிய படங்கள் தொடங்கப்படும்போதும் தனக்கு வாய்ப்பு வருமா? என்று எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்.
தற்போது ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்திலாவது தனக்கு ஏதாவது வேடம் கிடைக்குமா? என்று மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.
சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வந்தபோதும், ரஜினி படவாய்ப்பு என்றால் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறாராம் திரிஷா.
ஆக, கார்த்திக் சுப்பராஜாவது த்ரிஷாவை கண்டு கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.