பெற்றோர்களின் கனவும் போராட்டம் தான் : அனுபமா குமார் | பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி | தெலுங்கில் டப்பிங் பேசும் துல்கர் சல்மான் | வெப்சீரிஸில் சுனைனா | படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தும் ரகுல் ப்ரீத் சிங் | கணவர் படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா | தாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல் | டுவிட்டருக்கு திரும்பிய ராதிகா | கார்த்திக் சுப்பராஜ்க்கு காலா தந்த கால அவகாசம் | ஏப்ரலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால் |
நட்சத்திரங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் 1 கோடி சம்பளம் வாங்கிய ரகுல் ப்ரீத் சிங், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா உடன் நடிக்கும் என்.ஜி.கே. படத்தில் 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சீமராஜ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதைத் தொடர்ந்து, ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங் நடித்ததால் அப்படத்தின் தெலுங்கு டப்பிங் நல்ல விலைக்குப்போனது. தெலுங்கில் முன்னணி காதாநாயகியான இவரை நடிக்க வைத்தால் தன்னுடைய படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் கூடுதல் விலைக்குப்போகும் என்ற எண்ணத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் ஜோடியாக ரகுலை அணுகினர்.
ஒன்னே முக்கால் கோடி சம்பளம் கேட்டார் ரகுல். மறுபேச்சு பேசாமல் பெரிய தொகையைக் கொடுத்து அவரை புக் பண்ணிவிட்டனர். அதன் பிறகே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.