பெற்றோர்களின் கனவும் போராட்டம் தான் : அனுபமா குமார் | பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி | தெலுங்கில் டப்பிங் பேசும் துல்கர் சல்மான் | வெப்சீரிஸில் சுனைனா | படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தும் ரகுல் ப்ரீத் சிங் | கணவர் படம் மூலம் தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா | தாய்வீட்டை நம்பியிருக்கும் நிகிலா விமல் | டுவிட்டருக்கு திரும்பிய ராதிகா | கார்த்திக் சுப்பராஜ்க்கு காலா தந்த கால அவகாசம் | ஏப்ரலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சாக்ஷி அகர்வால் |
பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம், நில் கவனி காதலி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெயந்தி. அன்றைய எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், கன்னட மொழியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மட்டும் 500 படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வரும் ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.