காமெடி நடிகர் ராம்தாஸ் திருமணம் | தோள்பட்டை காயம் : ஹிந்தி படத்திலிருந்து விலகிய மாதவன்! | விமர்சனத்தை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத அரசு : கமல் | தமிழில் வருகிறது நயன்தாராவின் மலையாளப்படம் | இலங்கையில் எங்க வீட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பு : பொதுமக்கள் எதிர்ப்பு | சாலை பாதுகாப்புக்கு உதவிய பிரியா வாரியரின் கண்ணசைவு | சர்ச்சை கருத்து : இளையராஜா வீடு முற்றுகை | விமான தொழில்நுட்பம் அறிய மாணவர்களுடன் அஜித் சந்திப்பு | சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி |
காமெடி நடிகர் ராம்தாஸ், தேன்மொழி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ராம்தாஸ். இவரை, ராம்தாஸ் என்று சொல்வதை விட முனிஸ்காந்த் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். முண்டாசுப்பட்டி படத்தில் அவர் ஏற்று நடித்த முனிஸ்காந்த் ரோல் பிரபலமானது. தொடர்ந்து மாநகரம், பசங்க 2, மரகத நாணயம், சென்னையில் ஒருநாள் 2, கலகலப்பு 2, குலேபகாவலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசமும் ஏராளமான படங்கள் வைத்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கும், தேன்மொழி என்ற பெண்ணுக்கும் சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் இன்று(மார்ச் 26) எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.