தோள்பட்டை காயம் : ஹிந்தி படத்திலிருந்து விலகிய மாதவன்! | விமர்சனத்தை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத அரசு : கமல் | தமிழில் வருகிறது நயன்தாராவின் மலையாளப்படம் | இலங்கையில் எங்க வீட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பு : பொதுமக்கள் எதிர்ப்பு | சாலை பாதுகாப்புக்கு உதவிய பிரியா வாரியரின் கண்ணசைவு | சர்ச்சை கருத்து : இளையராஜா வீடு முற்றுகை | விமான தொழில்நுட்பம் அறிய மாணவர்களுடன் அஜித் சந்திப்பு | சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி |
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற "மாணிக்க மலராய பூவி..." என்ற பாடலில் அறிமுக நடிகை பிரியா வாரியர் காட்டிய கண்ணசைவு இளைஞர்களின் உலகையே அதிர வைத்தது. பேஸ்புக், டுவிட்டர் என அவர் கண்ணசைவு உலக புகழ்பெற்றது. தற்போது பிரியா வாரியரின் கண்ணசைவை வைத்து போலீசார் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ அல்ல... குஜராத்தில். இங்குள்ள வதோதரா நகர போலீசார் தங்களது இணைய தளம், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் விளம்பர போர்டுகளில் பிரியா வாரியரின் கண் அசைவு படத்தை போட்டு அதன் அருகில் "கண் அசைவுகளாலும் விபத்துக்கள் நேரலாம். கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்" என்று வாசகம் எழுதியுள்ளனர். இந்த விளம்பரம் வைரலாக பரவி வருவதோடு. போலீசாருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
"மக்களுக்கு நேரடியாக ஒரு கருத்தை சொல்வதை விட திரை பிரபலங்களின் புகழ்பெற்ற வசனங்கள், ஸ்டைல்களில் சொல்லும் போது வேகமாக சென்றடையும். இதுவரை பாலிவுட் நடிகர், நடிகைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்தோம். ஆனால் பிரியா வாரியரின் கண்ணசைவு விளம்பரம்தான் பெரிய அளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளது" என்கிறார் வதோதரா போலீஸ் கமிஷனர் மனோஜ் சசிதர்.