சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி | பாலிவுட் நடிகர் பரூக் ஷேக்கிற்கு கூகுள் கவுரவம் | பெண் கல்வி தூதர் ஆனார் கத்ரினா | உதவியாளர்களுக்கு நடிகர்களே சம்பளம் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | வேலை நிறுத்தத்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்க கூடாது: விஷாலிடம் ரஜினி வேண்டுகோள் | மிடுக்கான இன்ஸ்பெக்டராக கலக்கிய கெளதம் மேனன் | என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் | காதலருக்கு நன்றி சொன்ன நயன்தாரா |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் பரூக் ஷேக். குஜராத்தை சேர்ந்த இவர் 1973 முதல் 2014 வரை சினிமாவில் நடித்தார். லாகூர் என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். கடந்த 2013ம் ஆண்டில் தனது 63வது வயதில் காலமானார்.
அவரது 79வது பிறந்த தினம் இன்று. அதையொட்டி கூகுள் நிறுவனம் அவரை நினைவுகூறும் வகையில் அவரது படத்தை தனது டூடுலாக வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. பரூக் 70களில் புகழ்பெற்றிருந்ததால் அப்போது வெளிவந்த பட போஸ்டர்கள் போன்று தனது டுடுலை வடிவமைத்துள்ளது கூகுள். குறிப்பாக அவர் நடித்த புகழ்பெற்ற உமரா ஜான் படத்தில் இருந்த அவரது தோற்றத்தை பயன்படுத்தி உள்ளது. கூகுளின் இந்த மரியாதையை பெற்ற ஒரு சில இந்திய நடிகர்களில் பரூக்கும் இடம்பெற்றுள்ளார்.