சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி | பாலிவுட் நடிகர் பரூக் ஷேக்கிற்கு கூகுள் கவுரவம் | பெண் கல்வி தூதர் ஆனார் கத்ரினா | உதவியாளர்களுக்கு நடிகர்களே சம்பளம் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | வேலை நிறுத்தத்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்க கூடாது: விஷாலிடம் ரஜினி வேண்டுகோள் | மிடுக்கான இன்ஸ்பெக்டராக கலக்கிய கெளதம் மேனன் | என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் | காதலருக்கு நன்றி சொன்ன நயன்தாரா |
கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கயிருந்த ராணா படத்தில் நாயகியாக ஒப்பந்தமானவர் தீபிகா படுகோனே. ஆனால் அந்த படம் கைவிடப் பட்டதால் பின்னர் ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேசன் படத்தில் நாயகியாக நடித்தார்.
மேலும், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, இந்தி நடிகரும் தனது பாய் பிரண்டுமான ரன்வீர் சிங்கை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தற்போது பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா படுகோனே.
அதனால், தற்போது தீபிகா, ரன்வீர் ஆகிய இருவரும் லண்டனில் இருக்கும் நிலையில், தீபிகாவின் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களை பெங்களூரில் ஷாப்பிங் செய்து வருகிறார்களாம்.