சேலம்:மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதற்கான காரணத்தை, முதல்வர் பழனிசாமி விளக்கினார்.
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில், சேலம் - சென்னை விமான சேவை துவக்க விழா, நேற்று நடந்தது. தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மத்திய அரசு, உதான் திட்டத்தில், 50 சதவீத மானியம் வழங்குவதால், சேலம் விமான போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. அதிகபட்ச கட்டணம், 2,500க்கு மேல் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையோடு இயங்கு வதால், சாதாரண மக்கள், இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி - சென்னை இடையே, கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை
எடுக்கப்படுவ தால், அதற்கான உதவிகளை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு
அவர் பேசினார்.
மத்திய விமான போக்கு வரத்து துறை அமைச்சர் சுரேஷ்பிரபு, வீடியோகான்பரன்சிங் மூலம் பேசுகையில், ''சாதாரண மக்களை, உலக நாடு களுடன் இணைக்கும் ஜெயலலிதாவை போன்று, பிரதமரின் தொலைநோக்கு பார்வை நிறைவேறி உள்ளது,'' என்றார்.
முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
நாட்டில் பயன்பாடில்லாத, குறைந்த பயன்பாடு கொண்ட, 13 விமான நிலையங்களை தேர்வு செய்து, உதான் திட்டத்தில் இயக்க, 2017ல் மத்திய அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதில், முதலாவ தாக தமிழகத்தில், சேலம் விமான சேவை துவங்கப் பட்டுள்ளது. இதற்காக, 1 சதவீத வாட் வரியை குறைத்துள்ளதோடு, பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சேவை கட்டணத்தை, தமிழக அரசு ஏற்கும்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு இருப்பதால்
தான், தமிழகத்துக்கு தேவையான உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. தேவையான திட்டங்கள், அதிகளவில் கிடைக்கின்றன. ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில், எத்தனை லட்சம் வீடுகள் வேண்டுமானாலும் கட்டித் தருவதாக, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரியில், துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பும் கொடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
சென்னையில் இருந்து, தினமும் காலை, 9:50 மணிக்கு புறப்பட்டு, சேலத்துக்கு, 10:40 மணிக்கு விமானம் வந்து சேரும். சேலத்தில், 11:00 மணிக்கு புறப்பட்டு, 11:50 மணிக்கு, சென்னை சென்றடையும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து