சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி | பாலிவுட் நடிகர் பரூக் ஷேக்கிற்கு கூகுள் கவுரவம் | பெண் கல்வி தூதர் ஆனார் கத்ரினா | உதவியாளர்களுக்கு நடிகர்களே சம்பளம் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | வேலை நிறுத்தத்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்க கூடாது: விஷாலிடம் ரஜினி வேண்டுகோள் | மிடுக்கான இன்ஸ்பெக்டராக கலக்கிய கெளதம் மேனன் | என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் | காதலருக்கு நன்றி சொன்ன நயன்தாரா |
கோலிசோடா படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த மார்ச் மாதமே ரிலீசாக வேண்டிய படம் , திரையுலக ஸ்டிரைக் காரணமாக வெயிட்டிங்கில் உள்ளது.
மேலும், கோலிசோடா படத்தைப் போலவே இந்த கோலிசோடா-2 படத்திலும் ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாக சொல்லும் விஜய் மில்டன், இந்த படத்தில் சமுத்திரகனி, கெளதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்.
குறிப்பாக, கெளதம்மேனன் ஒரு டைரக்டர் என்றபோதும், ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்திருப்பதாக சொல்கிறார். கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அவர் வரும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல் வாங்கும். அந்த அளவுக்கு அசத்தலாக நடித்துள்ளார். அதோடு, இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சமுத்திரகனியை போன்று இயக்குனர் கெளதம்மேனனும் பிசியான நடிகராகி விடுவார் என்கிறார் விஜய் மில்டன்.