சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி | பாலிவுட் நடிகர் பரூக் ஷேக்கிற்கு கூகுள் கவுரவம் | பெண் கல்வி தூதர் ஆனார் கத்ரினா | உதவியாளர்களுக்கு நடிகர்களே சம்பளம் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | வேலை நிறுத்தத்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்க கூடாது: விஷாலிடம் ரஜினி வேண்டுகோள் | மிடுக்கான இன்ஸ்பெக்டராக கலக்கிய கெளதம் மேனன் | என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் | காதலருக்கு நன்றி சொன்ன நயன்தாரா |
மலையாள சினிமாவில் அதிரடி கவர்ச்சி நாயகியாக வலம்வந்தவர் ஷகீலா. இவரது படங்களுக்கென்று கேரளாவில் ஒரு பெரிய ரசிகர் படையே இருந்ததால், ஷகிலா நடித்த படம் திரைக்கு வருகிறதென்றால் மம்முட்டி, மோகன்லால் படங்களே பின்வாங்கியிருக்கின்றன. அந்த அளவுக்கு கலெக்சன் குயினாக இருந்திருக்கிறார் ஷகீலா.
இந்த நிலையில், தற்போது ஷகீலாவின் வாழ்க்கை வரலாறை கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் படமாக எடுக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் பெங்களூர், கேரளாவில் நடைபெற இருக்கிறது. முன்னதாக, மலையாள மொழியை தற்போது ஒரு மாஸ்டரை வைத்து தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் ரிச்சா, மலையாளத்தில் தனக்குத்தானே டப்பிங் பேசப்போகிறாராம்.
மேலும், கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தனக்கும் ஏதேனும் விருது கிடைக்காதா? என்பதற்காகத்தான் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறாராம் ரிச்சா.