சாந்தி கிருஷ்ணாவுக்கு காமெடி கற்றுத்தந்த நடிகர் | மாற்றிச்சொன்ன மம்முட்டி ; திருத்திய சிறுமி | எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி | பாலிவுட் நடிகர் பரூக் ஷேக்கிற்கு கூகுள் கவுரவம் | பெண் கல்வி தூதர் ஆனார் கத்ரினா | உதவியாளர்களுக்கு நடிகர்களே சம்பளம் கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | வேலை நிறுத்தத்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்க கூடாது: விஷாலிடம் ரஜினி வேண்டுகோள் | மிடுக்கான இன்ஸ்பெக்டராக கலக்கிய கெளதம் மேனன் | என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் | காதலருக்கு நன்றி சொன்ன நயன்தாரா |
எண்பதுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. பல வருடங்களுக்கு பின் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் என்ட்ரி ஆகியுள்ளார். கடந்த வருடம் நிவின்பாலியின் அம்மாவாக 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது குஞ்சாக்கோ போபனின் அம்மாவாக 'குட்டநாடன் மர்பாப்பா' என்கிற படத்தில் நடித்துள்ளார். வழக்கமாக சீரியஸ் ரோல்களில் நடித்துவந்த சாந்தி கிருஷ்ணா, இந்தப்படம் முழுக்க காமெடியில் அசத்தியிருக்கிறாராம்.
ஆரம்பத்தில் காமெடி காட்சிகளில் நடிக்க ரொம்பவே தடுமாறினாராம் சாந்தி கிருஷ்ணா. ஆனால் படத்தில் இவருடன் பல காட்சிகளில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் தர்மாஜன் போல்காட்டி, இவருக்கு காமெடியாக நடிக்கும் நுணுக்கங்களை சொல்லிக்கொடுக்க, அடுத்துவந்த நாட்களில் காமெடியில் நன்றாக பிக்கப் ஆகிவிட்டாராம் சாந்தி கிருஷ்ணா.