போலி கணக்குகள் கொடுத்து, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த, பிரபல நிறுவனங்களின் பட்டியல் நீள்கிறது. சென்னை யில், 'கனிஷ்க்' நகைக் கடையை தொடர்ந்து, நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனமும், 250 கோடி ரூபாயை, 'ஸ்வாகா' செய்த விவகாரம், தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் துணை நிறுவனத்தின், நகை சேமிப்பு திட்டத்தில், 75 கோடி ரூபாய் முதலீடு செய்து, 21 ஆயிரம் பேர் ஏமாந்துள்ளனர். இது தொடர் பாக, பாரத ஸ்டேட் வங்கி புகார் செய்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த, நிரவ் மோடியும், அவரது உறவினர், மெஹுல் சோக்சியும், பல்வேறு நாடுகளில், தங்கம், வைரம், பிளாட்டினம் என, விதவிதமான நகைகள் விற்பனை செய்யும் கடைகளை, 'கீதாஞ்சலி ஜெம்ஸ்' என்ற, பெயரில் நடத்தி வந்தனர்.இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் வாங்கி, ஏப்பம் விட்டு உள்ளனர்.
வங்கி அதிகாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, வெளிநாட்டிற்கு தப்பிய, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியை தேடி வருகின்றனர்.இதையடுத்து, 'ரோட்டோ மெக்' பேனா நிறுவன அதிபர், விக்ரம் கோத்தாரி, பொதுத்துறை வங்கிகளில், 3,695 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்துள்ள விவகாரம், வெளிச்சத்துக்கு வந்தது. அவரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அதேபோல, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டோடம் இன்பிராஸ்ட்ரக்சர்' என்ற, நிறுவனத்தின்
அதிபர், சலாலித், அவரது மனைவி, கவிதா ஆகியோர், 1,394 கோடி ரூபாய், வங்கி மோசடி வழக்கில் கைதாகி உள்ளனர்.இப்படி அடுத்தடுத்து, தொழில் அதிபர்கள் செய்த,
வங்கி மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
அந்த வரிசையில், சென்னை உட்பட, பல
நகரங் களில், 'கனிஷ்க்' நகைக்கடை நடத்தி வந்த, பூபேஷ்குமார் ஜெயின், அவரது
மனைவி நீடா ஜெயின் மற்றும் கூட்டாளிகள் உட்பட,ஐந்து பேர், 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அம்பலம்
இந்நிலையில், சென்னை உட்பட, பல நகரங் களில் செயல்பட்டு வந்த, பிரபல நகைக்கடை நிறுவனமான, என்.எஸ்.ஜெ., எனப்படும், 'நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி' நிறுவனமும், மோசடி வழக்கில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம், ஆண்டு வருமானத்தை அதிகம் காட்டி, போலி கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்து, பாரத ஸ்டேட் வங்கியில், 250 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
வங்கி அதிகாரிகள் புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், அந்த நகைக்கடை நிறுவன அதிபர்களை கைது செய்ய, தீவிரம் காட்டி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மோசடி செய்த பணத்தில், அவர்கள், சென்னை, காஞ்சிபுரம் என, பல மாவட்டங்களில், ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், சட்ட விரோதமாக, வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
21 ஆயிரம் பேர்
இதுமட்டுமின்றி, 'நாதெள்ளா சம்பத் செட்டி' என்ற பெயரில், நாதெள்ளா ஜுவல்லரியின்
துணை நிறுவனமும் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், சென்னையில், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி என, எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில், நகைக்கடைகளை நடத்தியது.
ரங்கநாத குப்தா, அவரது மகன்கள், பிரபன்னகுமார், பிரசன்னகுமார், உறவினர், கோடா சுரேஷ் ஆகியோர், இவற்றை நடத்தி வந்தனர்.இவர்கள், தங்க நகை சேமிப்பு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்கள், 21 ஆயிரம் பேரிடம், 75 கோடி ரூபாய் வசூலித்த னர். ஆனால், 2017 அக்டோபரில், திடீரென இந்த கடைகள் மூடப்பட்டன. அதனால், இவற்றில் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த மோசடி தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்
பிரிவில், 3,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபர்கள், விரைவில் கைது செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சுருட்டியது எப்படி?
நாதெள்ளா சம்பத் செட்டி நகைக்கடை அதிபர்கள், வாடிக்கையாளர்களிடம், தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ், மாதந்தோறும், 1,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை, தவணையாக வசூலித்து உள்ளனர். 10 முதல், 15 மாதத்திற் குள், தங்க நகைகளாக தருவதாக கூறியுள்ளனர்; அதன் மூலமாக, 75 கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.
ஆனால், சொன்னபடி நகைகள் தராமல் இழுத்தடித்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர்கள், கடை வாசலில் குவிந்தனர். அவர்களுக்கு காசோலைகள் கொடுத்து, நம்பிக்கை ஏற்படுத்துவது போல் நடித்து, பின், கடைகளை மூடிவிட்டு ஓடி விட்டனர். பணம் இல்லாமல், திரும்பி வந்த காசோலைகளுடன், வாடிக்கையாளர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply