கொச்சி:கேரளாவைச் சேர்ந்த பல இளைஞர் களை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்ட வழக்கில், பெண் பயங்கரவாதி, யாஸ்மின் முகமது ஷாகித்திற்கு, சிறப்பு நீதிமன்றம், ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
மேற்காசியாவை சேர்ந்த, ஈராக், சிரியாவின் பல பகுதிகளை, இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆக்கிரமித்தது. இந்த அமைப்பின் தாக்குதல்களில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அமைப்புகள்
ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவும், ராணுவ வீரர்களை அனுப்பி, ஈராக், சிரியா நாடுகளின் ராணுவங்களுக்கு உதவி வருகின்றன. இதனால், பெரும்பாலான ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து, ஐ.எஸ்., விரட்டி அடிக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும், இந்த அமைப்புக்கு பலர்,
ஆட்களை திரட்டி அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், ஆப்கானிஸ்தான் சென்று, அங்கிருந்து, ஈராக், சிரியா சென்று, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
தேசிய புலனாய்வு
ஐ.எஸ்., அமைப்புக்கு, கேரளாவில்,காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர் களை திரட்டி அனுப்பும் வேலையை, அந்த அமைப்பைச் சேர்ந்த, அப்துல் ரஷித் அப்துல்லாவும், பீஹாரைச் சேர்ந்த, யாஸ்மின் முகமது ஷாகித் என்ற பெண்ணும் செய்ததாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்த்த வழக்கில், 15 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சதி வேலையின் பின்னணியில், அப்துல் ரஷித் அப்துல்லா, மூளையாக செயல்பட்டுள்ளான். அப்துல்லா உட்பட, 13 பேர், ஆப்கனுக்கு தப்பிச் சென்றனர். இவர்களில் மூன்று பேர், விமான தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன; ஒருவன், சிரியாவில் உள்ளான்.
ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்ப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த, யாஸ்மின், தன் குழந்தையுடன் ஆப்கனுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, டில்லி சர்வதேச விமானநிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டாள். யாஸ்மின் உட்பட, இருவருக்கு
எதிராக, என்.ஐ.ஏ., கடந்தாண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த
வழக்கை விசாரித்து வந்த, எர்ணாகுளம், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம்,
யாஸ்மினுக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, நேற்று
தீர்ப்பளித்தது. மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மூளை சலவை செய்த அப்துல்லா
கேரளாவில், காசர்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில், முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இந்த இளைஞர்களை, ஐ.எஸ்., அமைப்பில் சேர்த்து, ஜிஹாத் எனப்படும் புனிதப் போரில் ஈடுபடுத்த, அப்துல் ரஷித் அப்துல்லாவும், யாஸ்மினும் சதி திட்டம் தீட்டினர். 2015, ஜூலை முதல், அப்துல்லா, காசர்கோட்டில் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்.,சில் சேர்த்துள்ளான்.
ஐ.எஸ்., அமைப்புக்காக நிதி திரட்டும் வேலை யில், அப்துல்லா ஈடுபட்டுள்ளான். அவ்வாறு திரட்டிய பணத்தை, யாஸ்மின் வங்கிக் கணக்குக்கு, அப்துல்லா மாற்றி உள்ளான். ஐ.எஸ்., பயங்கரவாத நடவடிக்கை களுக்காக, அந்த பணத்தை யாஸ்மின் பயன்படுத்தியது, என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து