அனுஷ்காவை பாதித்த படங்கள்! | ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்! | தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்! | விக்ரமை அதிர வைத்த பாலா! | இந்தியன் 2-விற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் | திரையுலகம் ஸ்டிரைக் : ரஜினியுடன் நடிகர் விஷால் சந்திப்பு | திரையுலக ஸ்டிரைக் : அரவிந்த்சாமியின் அசத்தல் கருத்து | காலாவில் 6 சண்டை காட்சிகள் : திலீப் சுப்பராயன் பிரமிப்பு | வழக்கத்தை உடைத்த மம்முட்டியின் பரோல் ரிலீஸ்..! | தமிழுக்கு வரும் திலீப் பட நாயகி |
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'குட்டநாடன் மர்பப்பா'. வரும் மார்ச்-29ல் இந்தப்படம் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ ஒரு போட்டோகிராபராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திதி ரவி என்பவர் நடிக்க, முக்கிய வேடத்தில் பன்னீர் புஷ்பங்கள்' சாந்தி கிருஷ்ணா நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் ஹைலைட்டாக சலீம்குமார், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ஹரீஷ் கரணன், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, இன்னொசன்ட் மற்றும் டினி டாம் என எட்டு காமெடி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்துள்ளனர். அதனால் இது முழு நீள காமெடிப்படம் என்பதை சொல்லவே தேவையில்லை.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீஜித் விஜ இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். கேரளாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் கோதமங்கலம் பகுதியில் உள்ள காட்டில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.