'மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது,
ஒருதலைப் பட்சமானது; துரதிருஷ்ட வசமானது' என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இம்மாநிலத்துக்கு, சிறப்பு அந்தஸ்து அளிக் காததை கண்டித்து, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி அரசிலிருந்து, சமீபத்தில், தெலுங்கு தேசம் வெளியேறியது.இது குறித்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, எட்டு பக்க கடிதம் அனுப்பி உள்ளார்;
அதில் அவர் கூறியுள்ளதாவது:ஆந்திர மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும், பிரதமர், நரேந்திர மோடி செய்தார். ஆந்திராவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அதன்
நிதியாதாரத்தை அதிகரிக்கவும் உதவும், பல்வேறு முடிவுகள், 2014 முதல், மத்திய அரசால் எடுக்கப்பட்டன.
ஆந்திராவில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., - ஐ.ஐ.பி.இ., - விவசாய பல்கலை, எய்ம்ஸ்போன்ற மருத்துவமனை மற்றும் கல்வி மையம், தேசிய பேரிடர் மேலாண்மை மையம் ஆகியவற்றை, மத்திய அரசு அமைத்தது. நடப் பாண்டு பட்ஜெட்டில், மத்திய பல்கலை, பழங்குடி யினருக்கான பல்கலை ஆகியவற்றை ஆந்திராவில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவிர, விசாகப்பட்டினம் - சென்னை இடையே, 800 கி.மீ., நீளமுள்ள தொழில் பாதை அமைக்கவும், விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி ஆகிய இடங்களில் விமான நிலையங்களை மேம்பாடுத்த வும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஆந்திராவின் தலைநகர், அமராவதியை பல்வேறு நகரங்களுடன் இணைக்க, விரைவு ரயில் வசதி ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்த சூழ்நிலையில், தே.ஜ., கூட்டணியில் இருந்து
தெலுங்கு தேசம் வெளியேறியது, துரதிருஷ்ட வசமானது; ஒருதலைப்பட்சமானது.
வளர்ச்சித் திட்டங்களை கருதாமல், அரசியல் காரணங் களுக்காக, இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.இதற்கிடையே, அசாமில்
நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில்,
அமித் ஷா பேசுகையில், ''அடுத்தலோக்சபா தேர்தலில், வட கிழக்கு மாநிலங்களில், மொத்தமுள்ள, 25 லோக்சபா தொகுதிகளில், 21ல், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதே, என் இலக்கு. ''இந்த இலக்கை அடைய, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்,'' என்றார்.
அமித் ஷாவின் கடிதத்தில், பல தவறான தகவல்கள் உள்ளன. ஆந்திர அரசை, திறமை யற்றது என, அமித் ஷா கூற முயற்சிக்கிறார். தயவு செய்து, பொய்யான தகவல்களை, மக்களிடையே பரப்ப வேண்டாம்.
சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து