அனுஷ்காவை பாதித்த படங்கள்! | ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்! | தமிழில் டப்பிங் பேசிய நானா படேகர்! | விக்ரமை அதிர வைத்த பாலா! | இந்தியன் 2-விற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் | திரையுலகம் ஸ்டிரைக் : ரஜினியுடன் நடிகர் விஷால் சந்திப்பு | திரையுலக ஸ்டிரைக் : அரவிந்த்சாமியின் அசத்தல் கருத்து | காலாவில் 6 சண்டை காட்சிகள் : திலீப் சுப்பராயன் பிரமிப்பு | வழக்கத்தை உடைத்த மம்முட்டியின் பரோல் ரிலீஸ்..! | தமிழுக்கு வரும் திலீப் பட நாயகி |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது டிஜிட்டல் சேவை நிறுவனங்களை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போராடி வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் அளவுக்கதிகமாக தயாரிப்பாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டு, மேலும் பணத்தை அவர்களிடமிருந்து சுரண்டப் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஒரு படத்தை தியேட்டரில் திரையிடும் டெக்னாலஜியை மட்டும்தான் அந்த சேவை நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால், ஒரு படத்தை முதலீடு செய்து அதை உருவாக்குவது தயாரிப்பாளர்கள்தான். அதனால், அந்தப் படத்திற்கான விளம்பர வருமானங்கள் அனைத்தும் தயாரிப்பாளரைத்தான் போய்ச் சேர வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
நடிப்புடன் தன் சொந்த கம்பெனியை நிர்வாகம் செய்து வரும் அரவிந்த்சாமி, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சர்வதேச பிசினஸ் பற்றிய முதுகலைப் படிப்பு படித்தவர் என்பது முக்கியமானது.
“ஒரு தயாரிப்பாளர் வி.பி.எஸ் கட்டணத்தை செலுத்தினால், அந்த படத்தை சிதைக்கக் கூடாது. மக்கள் தியேட்டருக்கு வருவது படத்தைப் பார்க்கத்தான். அதனால், அனைத்து விளம்பர வருவாய்களும் தயாரிப்பாளருக்குதான் சேர வேண்டும். அதை தயாரிப்பாளர்கள் தியேட்டர்காரர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் அது நியாயமானதுதான்.
ஒரு படத்தின் சொந்தக்காரரான தயாரிப்பாளர் அவருடைய படத்தில் எந்த விளம்பரங்களை, எவ்வளவு கட்டணத்திற்குப் போட வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். படத்திற்காக யார் முதலீடு செய்தார்களோ அவர்களுக்கு வருமானம் போய் சேர்வதுதான் நியாயமானது. டெக்னாலஜியை செயல்படுத்துபவருக்கு அது சொந்தமல்ல,” என அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.