புதுடில்லி:''நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கும், நீதிபதிகள் பற்றாக்குறை காணப்படுவதற்கும், மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் காரணம்,'' என, காங்., தலைவர், ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.
குற்றச்சாட்டு
பிரிட்டனைச் சேர்ந்த, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், 'பேஸ்புக்' சமூக தளத்தில் இருந்து தகவல்களை திருடி
தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் நடந்த தேர்தல்களின்போது, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவையை, காங்., கட்சி பயன்படுத்தியதாக, பா.ஜ.,வைச்சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், சமீபத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டை, காங்., தலைவர், ராகுல் மறுத்துள்ளார்; இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் சேவை களை, காங்., பயன்படுத்தியதாக, பொய் செய்தி களை, அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பரப்பி வருகிறார்.
உண்மையில்,இந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தியது, பா.ஜ., தான். நாட்டில், நிலுவை யில் உள்ள எண்ணற்ற
வழக்குகளால், சட்ட நடை முறை, முடங்கி கிடக்கிறது. உச்ச நீதிமன்றத்தில், 55
ஆயிரம் வழக்குகள் முடங்கியுள்ளன. உயர்
நீதிமன்றங்களில், 37 லட்சம்,கீழ் நீதிமன்றங் களில்,2.6 கோடி வழக்குதேங்கி கிடக்கின்றன.
நியமிக்கப்படாத நிலை
:அதேசமயம், உயர் நீதிமன்றங்களில், 400, கீழ் நீதிமன்றங் களில், 6,000 நீதிபதிகள் நியமிக்கப் படாத நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம், மத்திய சட்ட அமைச்சர் தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து