சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் ஏப்ரலில் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'காலா' படத்தை ஏப்ரல் 27-ல் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்டிரைக் முடிந்த பிறகு, சென்சார் செய்யப்பட்ட படங்களை தேதி வாரியாக வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக வெளியிடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக காலா படம் ஏப்ரல் 27 அன்று வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தணிக்கை செய்யும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்க வேண்டிய தடையில்லா சான்றையும் இதுவரை வழங்காததினால் 'காலா' படத்தை தணிக்கை செய்ய முடியவில்லை. தடையில்லா சான்றைப் பெற்று வந்தால்தான் காலா படத்தை தணிக்கை செய்வோம் என்று சொல்வது சட்டவிரோதம். இந்த அடிப்படையில் தணிக்கை குழு மற்றும் கவுன்சில் மீது கோர்ட்டில் வழக்கு தொடரலாமா என லைகா நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
அப்படியே கோர்ட்டுக்குப் போனாலும் ஏற்கனவே, திட்டமிட்டபடி காலா படத்தை ஏப்ரல் 27 அன்று ரிலீஸ் செய்ய முடியாது என்பதே இப்போதைய நிலவரம்.
இந்த விஷயத்தில் கவுன்சிலும் கறாராக உள்ளது.